"செக்ஸ்" குறும்பில் ஈடுபட்ட டாக்டர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே ஓட்டேரி பகுதியில் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம், செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட சித்த மருத்துவர் கைதுசெய்யப்பட்டார்.

சென்னை புறநகரான வண்டலூர் அருகே உள்ளது ஓட்டேரி. இந்தப் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் சித்த வைத்தியம் பார்த்துவந்தார். அவரிடம் ஏராளமானோர் சிகிச்சை பெற வருவது வழக்கம்.

குழந்தை இல்லாத பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதாக தட்சிணாமூர்த்தி விளம்பரப்படுத்தியதால் நிறையப் பெண்கள்அவரை வந்து சந்திப்பது வழக்கம். முன்பதிவு செய்து கொண்டு தட்சிணாமூர்த்தியை சந்திக்கும் அளவுக்கு கூட்டம் வரத்தொடங்கியது.

பெண்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் தட்சிணாமூர்த்திக்கு சபலம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக வருகிற பெண்களிடம் செக்ஸ்சில்மிஷத்தில் ஈடுபடத் தொடங்கினார். அவர்களில் சிலரை வசியப்படுத்தி சந்தோஷத்தையும் அனுபவித்துள்ளார்.

தட்சிணாமூர்த்தியின் செக்ஸ் விளையாட்டை விரும்பாத பெண்கள், தொடர்ந்து வருவதை நிறுத்தினர். சிலர் மட்டும் துணிந்துஅவரைத் தட்டிக் கேட்டனர். அப்படிக் கேட்பவர்களிடம், உங்களது புகைப்படத்தை கம்ப்யூட்டர் உதவியுடன் நிர்வாணப் படமாகமாற்றி மானத்தை வாங்கி விடுவேன் என்று தட்சிணாமூர்த்தி மிரட்டியுள்ளார். இதனால் அவர்களும் தட்சிணாமூர்த்தியின்சில்மிஷம் குறித்து தொடர்ந்து பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

இந் நிலையில் லிமா எபனேசர் என்ற பெண் தட்சிணாமூர்த்தி மீது போலீஸில் புகார் கொடுத்தார். அதில், பெண்களிடம் சிகிச்சைஎன்றபெயரில் செக்ஸ் சில்மிஷத்தில் தட்சிணாமூர்த்தி ஈடுபடுவதாக லிமா கூறியிருந்தார்.

இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி தட்சிணாமூர்த்தியைக் கைது செய்தனர். 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+