ஐரோப்பாவில் விமான சேவை: ஜெட் ஏர்வேஸ் திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், மான்செஸ்டருக்கும், ஐரோப்பிய நாடுகளில் சில நகரங்களுக்கும் விமானப் போக்குவரத்தைவிரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் கூறுகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த ஆண்டில்ரூ.405 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
மும்பை மற்றும் லண்டன் நகரங்களுக்கு இடையே நேரடி விமான போக்குவரத்தை அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் ஜெட்ஏர்வேஸ் தான். அடுத்த 5 ஆண்டுகளில், மக்கள் முதலில் தேர்வு செய்யும் விமான நிறுவனமாக எங்கள் நிறுவனம் முன்னணியில்இருக்கும்.
விமான பயணிகளுக்கு சர்வதேச உணவு வகைகளுடன், தரமான இந்திய உணவுகளையும் வழங்கி வருகிறோம் என்றார் நரேஷ்கோயல்.












Click it and Unblock the Notifications