பாஜவிலிருந்து விலகினார் விஜயசாந்தி

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்:

பாரதிய ஜனதா மகளிரணியின் தலைவர் பதவியில் இருந்து பிரபல திரைப்பட நடிகை விஜயசாந்தி விலகினார். தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கைக்காக போராடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

பிரபல நடிகை விஜயசாந்தி சமீப காலமாக தெலுங்கானா பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தெலுங்கானாபிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் பாஜகவிலிருந்து விலகவும் தயங்க மாட்டேன் என்று அவர் அறிவித்தார்.

இந் நிலையில், ஐதராபாத்தில் விஜயசாந்தியின் இளைஞர் படை நிர்வாகிககள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு அவர்பேசுகையில், தெலுங்கானா பிரச்னையைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா உட்பட எந்த அரசியல் கட்சியும் முக்கியத்துவம்கொடுக்கவில்லை.

தனி தெலுங்கானா மாநிலம் அமையும் வரை எனக்கு ஓய்வில்லை. என்னுடைய கடைசி மூச்சு உள்ளவரை இதற்காக நான்போராடுவேன். வறுமைப் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த பகுதிக்கு உடனே நீதி கிடைக்கவேண்டும். தெலுங்கானாவைப்பொறுத்தவரையில் எல்லா அரசியல் கட்சிகளுமே சந்தர்ப்பவாதத்துடன் இப்பிரச்னையை அணுகுகின்றன

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகி தெலுங்கானாவுக்காகபோராடவேண்டும். தெலுங்கானா மக்கள் முதுகில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சவாரி செய்கிறது. அதற்கு இரண்டாவது மாநிலஅந்தஸ்து தருவதாகக் கூறுவது எல்லாம் வெறும் கண்துடைப்பு.

தெலுங்கானா தனி மாநிலம் பெறுவதற்காக நான் பாஜகவிலிருந்த விலகுகிறேன் என்றார் விஜயசாந்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+