தேரை ஓட வைத்த சூறாவளி!
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வீசிய சூறாவளிக் காற்றால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அர்த்த நாரீஸ்வரர் கோவில் தேர்தானாகவே ஓடத் தொடங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரவு 9 மணியளவில் பெய்த இந்த கன மழை மற்றும் சூறாவளிக் காற்றினால், திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது. கிழக்கு ரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகழ் பெற்ற அர்த்த நாரீஸ்வரர் கோவில் தேர், சூறாவளிக் காற்றினால்அசைந்து ஓடத் தொடங்கியது.
சுமார் 40 அடி தூரம் ஓடிய தேர், அங்கிருந்த மின் கம்பிகளில் தட்டி ஓட முடியாமல் நின்றது. தேர் வந்து மோதியதால் மின்கம்பங்கள் சில சாய்ந்து விழுந்தன. லேசான எடை கொண்டதாக தேர் இருந்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
சூறாவளிக்காற்றால் தேர் தானாக ஓடிய சம்பவம், திருச்செங்கோடு பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications