இன்றுடன் ஓய்கிறது கத்திரி வெயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக தமிழக மக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திர கத்திரி வெயில் இன்றுடன்முடிவடைகிறது.
இந்த ஆண்டு கோடை வெயில் மிகவும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய அன்று தமிழகம்முழுவதும் மழை பெய்தது. இதனால் மக்கள் கொஞ்சம் மகிழ்ந்தனர். ஆனால் அதற்குப் பிறகு வெயில் வழக்கம் போலசுட்டெரிக்கத் தொடங்கியது.
கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக வாட்டி வதைத்த அக்னி நட்சத்திர கத்திரி வெயில் இன்றுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது.இதனால் இனிமேல் படிப்படியாக வெயில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications