சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெ. வக்கீல் விவாதம் தொடருகிறது
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஜோதியின் விவாதம் சனிக்கிழமையும்தொடருகிறது.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வரும், தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசிஆகியோரின் வழக்கறிஞர் ஜோதி, வெள்ளிக்கிழமை முழுவதும் வாதாடினார். தனது வாதத்தின் முடிவில் வழக்கை திங்கள்கிழமைக்கு (மே 31) ஒத்தி வைக்குமாறு நீதிபதியை ஜோதி கேட்டுக் கொண்டார்.
அதற்கு நீதிபதி, வழக்கை ஒத்தி வைக்க கோரும் மனுவை தாக்கல் செய்யுங்கள் என்றார். இதையடுத்து ஜோதி மனுத் தாக்கல்செய்தார். பிறகு தினகரன் தரப்பு வழக்கறிஞர் நரேந்திரா, என்னுடைய மூத்த வழக்கறிஞர் திங்கள் கிழமை தான் வருகிறார்.அதனால், வழக்கை திங்கள் கிழமை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து ஜோதி கூறுகையில், என் உடல் நிலையை காரணம் காட்டி, வழக்கை ஒத்தி வையுங்கள். திங்கள் கிழமை நான் ஒருமணி நேரத்துக்கு அதிகமாக வாதாட போவதில்லை. தினகரன் வழக்கறிஞர் குமார், இரண்டு மணி நேரத்துக்கு அதிகமாக வாதாடபோவதில்லை. இதனால், அன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதம் முடிந்துவிடும். தொடர்ந்து மூன்று நாட்களாக நின்றுகொண்டிருக்கிறேன் என்றார்.
இதற்கு நீதிபதி, நாளை (இன்று) ஒரு மணி நேரம் வாதாடி விட்டு உட்கார்ந்து விடுங்கள். அதன் பின் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவாதாடுவார். நீங்கள் உட்கார்ந்து கொண்டு, அமைதியாக ஆச்சார்யாவின் வாதத்தை கேட்டுக் கொண்டிருங்கள். நிற்க வேண்டியதுஇருக்காதுஎன்றார்.
இதற்கு ஜோதி, நாளை பத்திரிகைகளில் இந்த செய்தி தான், பெரிய செய்தியாக வரும். வரும் காலத்தில் எங்களது நாட் குறிப்பை,இந்த வழக்குக்கு ஏற்றவாறு சரி செய்து கொள்கிறோம். தினமும் 14 மாத்திரை சாப்பிடுகிறேன். என் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "வழக்கை ஒத்தி வைக்க கோரி தாக்கல் செய்த மனுவை படியுங்கள் என்று ஜோதியிடம் அந்தமனுவை வழங்கினார். ஜோதி அந்த மனுவை படித்தார். மனுவில் "உடல் நிலையை கருத்தில் கொண்டு வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
உடல் நிலையைக் கருத்தில் கொண்டு என்னால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதி கூறியதும், மனுவை திருத்தி தருவதாகஜோதி கூறினார். அதற்கு நீதிபதி, மனுவை திரும்ப வழங்க முடியாது. இந்த வழக்கை தினமும் விசாரிக்க உச்சநீதிமன்றம்உத்தரவிட்டிருப்பதால், வழக்கறிஞர் ஜோதியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்கின் விசாரணை நாளைக்கு (இன்று) ஒத்திவைக்கப்படுகிறது. லண்டன் ஓட்டல் வழக்கும் நாளை (இன்று) ஒத்தி வைக்கப்படுகிறதுஎன்றார்.
இன்றும் இந்த வழக்கில் ஜோதி மற்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் தொடர்ந்து நடைபெறுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications