விடைத்தாள் மோசடி: கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்மன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொறியியல் கல்லூரி விடைத்தாள் மோசடி விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள், அந்தமாணவர்கள் தேர்வு எழுதியபோது, தேர்வுக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றிய ஆசிரியர்கள் ஆகியோரை விசாரணைக்குவருமாறு கூறி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
விடைத்தாள் மோசடி தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுத் துறை கட்டுப்பாட்டாளர் ஜெயபால், 5 பொறியியல்கல்லூரிகளின் முதல்வர்கள் ஆகியோரிடம் போலீஸார் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கைதாகியுள்ள மாணவர்கள் படித்து வந்த கல்லூரிகளின் ஆசிரியர்கள், தேர்வு எழுதிய மையத்தில் தேர்வுகண்காணிப்பாளர்களாக, மேற்பார்வையாளராக பணியாற்றிய ஆசிரியர்கள் ஆகியோரையும் விசாரிக்க மத்திய குற்றப் பிரிவுபோலீஸார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications