ராணிமேரி கல்லூரி: ஸ்டாலின் மீதான வழக்கு சூடு பிடிக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராணி மேரிக் கல்லூரி விவகாரம் தொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்குசென்னை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மெரீனா கடற்கரையோரம் உள்ள ராணி மேரிக் கல்லூரியை இடிக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து அக் கல்லூரி மாணவிகள்போராட்டம் நடத்தினர். அப்போது, கல்லூரிக்குச் சென்ற ஸ்டாலின், மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

இதையடுத்து மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.வேளச்சேரியில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு இரவில் சென்ற போலீஸார் அவரை கைது செய்தனர்.

இந்த கைதின் போது தங்களது பணியை செய்ய விடாமல் தடுத்தும், கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் கூறி ஸ்டாலின்உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.இதைத் தொடர்ந்து சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு வழக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நீதிபதி முருகேசன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் வழக்கறிஞர் டி.வி.கணேஷ்ஆஜரானார். பின்னர் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+