ராணிமேரி கல்லூரி: ஸ்டாலின் மீதான வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
ராணி மேரி கல்லூரி விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.அடுத்தகட்ட விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதையடுத்து மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஸ்டாலினை அவரது வேளச்சேரிவீட்டில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
அப்போது தங்களது பணியை செய்ய விடாமல் தடுத்தும், கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் கூறி ஸ்டாலின் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டதாகவும், ஒரு போலீஸ் வாகனம் தாக்கப்பட்டதாகவும் போலீஸார் கூறினர்.
இந்த வழக்கில் பின்னர் ஸ்டாலின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதன் பிறகு சென்னை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை (10ம் தேதி) நீதிபதி முருகேசன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணையை திங்கள்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்துநீதிபதி உத்தரவிட்டார்.
இன்று இவ்வழக்கு நீதிபதி முருகேசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர்நீதிமன்றத்திற்கு வரவில்லை. பின்னர் வழக்கை 20ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி முருகேசன், அன்று முதல் இவ்வழக்கு 7வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில்விசாரிக்கப்படும் என அறிவித்தார்.












Click it and Unblock the Notifications