காபிக்கு தமிழ் பெயர் தேவையா?: வாட்டி எடுத்த இளங்கோவன்!
சென்னை:
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கக் கோரி, யாரும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாக பாய்ந்துள்ளார்.
சென்னையில் வெளிநாட்டு வர்த்தக கொள்கை குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசுகையில்,
அவர்களுக்கும், நமக்கும் உள்ள வித்தியாசம் அவர்களுக்கு ஆங்கிலம் வராது, நம்மவர்களுக்கு ஆங்கிலப் புலமை அதிகம். இதை வைத்துத்தான் நாம் சீனாவை பல விஷயங்களில் முந்திக் கொண்டு போட்டியை சமாளிக்கிறோம்.
ஆனால் தமிழகத்தில் சிலர் ஆங்கிலம் தேவையில்லை, படிக்கவே கூடாது என்று கூறுகிறார்கள். உலகமே மிகப் பெரிய கிராமம் ஆகி விட்டது. இந்த நிலையில் காபிக்கு தமிழ்ப் பெயர் என்ன என்று ஆராய்வது தேவையா?
அந்தப் பெயர் தெரியாவிட்டால் அல்லது இல்லாவிட்டால் யாருமே காபியே சாப்பிடப் போவதில்லையா?
தமிழில் பெயர் இருந்தால் கூடுதலாக நான்கு டம்ளர் காபியா சாப்பிடப் போகிறீர்கள்? சைக்கிளின் பெயர் தமிழில் இல்லாவிட்டால் என்ன, சைக்கிளில் போகாமலா இருக்கப் போகிறீர்கள் அல்லது தலைகீழாகவா ஓட்டவாப் போகிறீர்கள்?
மக்களை தவறான பாதைக்குத் திருப்பக் கூடாது. அதற்கு மாறாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தக் கற்றுக் கொடுங்கள். கிராமத்தில் உள்ளவர்களை தொழில் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
அதை விட்டுவிட்டு காபிக்கு தமிழில் என்ன பெயர், இளங்கோவன் என்றால் என்ன அர்த்தம் என்பதெல்லாம் தேவையற்ற வாதம். திரும்பவும் நாம் காட்டுமிராண்டி வாழ்க்கைக்குப் போகக் கூடாது.
சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம். அது எப்படியிருந்தால் என்ன? தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்துவது மனித சக்தியை விரயம் செய்யும் செயலாகும். நம்முடைய அறிவையும், உழைப்பையும் வீணாக்கக் கூடாது என்றார் இளங்கோவன்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினரை அமைச்சர் இளங்கோவன் இவ்வளவு கடுமையாக பேசியுள்ளது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினரிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கும் எனத் தெரிகிறது.
ஒரு இளங்கோவன் கொடும்பாவி ரெடி பண்ணுங்கப்பா....
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications