மேலும் 2 நகைக் கொள்ளையில் திருட்டு போலீஸாருக்கு தொடர்பு!
சென்னை:
சென்னை மற்றும் திருச்சியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த சம்பவங்களிலும் மதுரையைச் சேர்ந்த 3திருட்டுப் போலீஸாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த வழக்குகளிலும் அவர்கள் கைதுசெய்யப்படவுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பாஸ்கரன், பன்னீர் செல்வம் ஆகிய இரு போலீஸ்காரர்கள் உள்பட 7 பேரை காவலில் எடுத்த சென்னையானை கவுணி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
மீனாட்சி சுந்தரம் என்ற மற்றொரு காவலரை புதன்கிழமை மாலை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 10 நாட்கள்அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால் அவரை 6 நாட்கள் மட்டும் போலீஸ் காவலில் வைத்துவிசாரிக்க மாஜிஸ்திரேட் அரிதாஸ் அனுமதித்தார்.
இந் நிலையில் மேலும் 2 கொள்ளை சம்பவங்களிலும் 3 போலீஸாருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்தஆண்டு மார்ச் மாதம் கோவையைச் சேர்ந்த நகைக் கடை வியாபாரி பாலாஜி என்பவர் சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ளவிடுதியில் தங்கியிருந்தார்.
கோவை திரும்புவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் கிளம்பினார்.
அப்போது 4 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளை பறித்துக்கொண்டு தப்பிவிட்டது. இதுதொடர்பாக இதே யானை கவுணி காவல் நிலையத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதேபோல 2004ம் ஆண்டு திருச்சி ரயில் நிலையம் அருகே கண்ணன் என்ற நகைக் கடை ஊழியரிடம் (மதுரையைச்சேர்ந்தவர்) இரண்டே கால் கிலோ தங்க நகைகள் கொள்ளைடிக்கப்பட்டன. இந்த இரு சம்பவங்களிலும் திருடப்பட்ட நகைகள்மற்றும் தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ. 20 லட்சமாகும்.
கோவை நகைக் கடை அதிபர் பாலாஜி, மீனாட்சி சுந்தரத்தின் புகைப்படத்தைப் பார்த்து, இவர்தான் தன்னிடம் தங்கக்கட்டிகளைப் பறித்துக் கொண்டு ஓடியவர் என அடையாளம் காட்டியுள்ளார். மேலும் திருச்சியிலும் இவர்கள் மீது வழக்குப்பதிவாகியுள்ளது.
இதையடுத்து இந்த இரு சம்பவங்களிலும் 3 போலீஸாரும் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications