ஆங்கிலத்தில் அசத்திய வேலு!
விழுப்புரம்:
தேமிழுக்காக ஒரு பக்கம் பாமக போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு,விழுப்புரத்தில் நடந்த ரயில்வே நிகழ்ச்சியில் சுத்தமான ஆங்கிலத்தில் பேசி, அதைக் கேட்ட செய்தியாளர்களையும், பாமகவினரையும் குழப்பி விட்டார்.
அப்படி சொல்வதோடு மட்டுமல்லாமல் பாமக நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்தில் யாராவது பேசினால், அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் நூறு ரூபாய் அபாரதமும்விதித்து வருகிறார்.
இந் நிலையில் ராமதாஸ் கூற்றுக்கு எதிர் மாறாக விழுப்புரம் ரயில் நிலைய நிகழ்ச்சியில் அக்கட்சியைச் சேர்ந்த ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு நடந்து கொண்டதுபாமகவினரிடையே பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி விட்டது.
மதுரையிலிருந்து விழுப்புரம் வரையிலான புதிய பாசஞ்சர் ரயில் மதுரையில் நேற்று இரவு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயிலை விழுப்புரத்தில் வரவேற்பதற்காகரயில் நிலையத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வேலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய வேலுவின் உரையில், முக்கால்வாசி ஆங்கில வார்த்தைகளே இருந்தன. அவ்வப்போது தமிழில் அவர் பேசினார். அவர் பேசியதில்முக்கால்வாசி விஷயங்கள் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்குப் புரியவில்லை.
அதேபோல செய்தியாளர்களிடம் அவர் பேசுகையிலும் ஆங்கிலத்திற்குத் தாவினார். தமிழில் பேசத் தொடங்கிய அவர் அப்படியே ஆங்கிலத்துக்கு மாறினார். திடீரெனதமிழ் வார்த்தைகளை கூறி விட்டு மீண்டும் ஆங்கிலத்திலேயே தொடர்ந்து பேசினார். இப்படி ஆங்கிலம் அவ்வப்போது தமிழுமாக மாறி மாறி இரு மொழிகளில் அவர்அளித்த பேட்டியால் செய்தியாளர்களும், பாமகவினரும் குழம்பிப் போய் விட்டனர்.
இத்தனைக்கும் கூடியிருந்த செய்தியாளர்கள் அனைவருமே சுத்தமான தமிழர்கள், உள்ளூர்க்காரர்கள். அங்கு கூடியிருந்தோரும் தமிழ்நாட்டவர்கள். எனவேஆங்கிலத்தில் பேச வேண்டிய அவசியமே இல்லாத நிலையில் வேலு இப்படி ஆங்கிலத்தில் போட்டுத் தாக்கியது கூடியிருந்தவர்களை குழப்பி விட்டது.
அதை விட பாமகவினர் தான் அதிகம் நெளிந்தனர். நமது தலைவர் ஆங்கிலத்தை வேண்டாம் என்கிறார். ஆனால் அமைச்சரோ, முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயேபேசுகிறார். இதைப் பார்த்தால் எதிர்க்கட்சிக்காரர்கள் நம்மை கேலி செய்ய மாட்டார்களா என்று தனியாக புலம்பித் தள்ளினார்கள்.
மத்திய அமைச்சர் இளங்கோவன் சில நாட்களுக்கு முன்பு தான் பாமகவையும், தமிழ் பாதுகாப்பு இயக்கத்தையும் நக்கலடித்துப் பேசினார். அவர் பேச்சுக்கு ஆதரவுதெரிவிப்பது போல வேலு நடந்து கொண்டது பாமகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications