சேது தொடக்க விழா: காங்கிரஸுக்கு ராசியான மஸ்தான்பட்டி
மதுரை:
சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா நடைபெறப் போகும் மதுரை மஸ்தான்பட்டி, காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் ராசியானஇடமாக கருதப்படுகிறது.
இதன் மூலம், மஸ்தான்பட்டி கிராமம் புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த கிராமம், காங்கிரஸ் கட்சிக்கு ராசியான இடமாககருதப்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு மூப்பனாரால் உருவாக்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன்இணைந்தது. இது தொடர்பான இணைப்பு மாநாடு இதே மஸ்தான்பட்டியில் தான் சோனியா முன்னிலையில் நடந்தது.
காங்கிரஸுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்த பிறகு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் புதிய செல்வாக்கைப் பெற்றதாக காங்கிரஸ்தரப்பில் கருதப்படுகிறது. திமுகவுடன் கூட்டணி, அதைத் தொடர்ந்து 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் கிடைத்த அமோக வெற்றிஉள்ளிட்ட பல்வேறு சாதகமான அம்சங்களை நினைத்துப் பார்க்கும் காங்கிரஸார்,
மஸ்தான்பட்டி விழாவுக்குப் பிறகு தான் காங்கிரஸ் கட்சிக்கு பல நல்ல விஷயங்கள் நடந்ததாக கூறுகிறார்கள்.
எனவே மதுரையில் நடக்கப் போகும் சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவை அதே மஸ்தான்பட்டியில் நடத்த வேண்டும் என்றுஅவர்கள் டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை விடுத்தனர். அதை பாலுவும் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்தே மஸ்தான்பட்டியைஅவர் இறுதி செய்ததாக கூறப்படுகிறது.
விரைவில் சட்டசபைத் தேர்தல் வரப் போகும் நிலையில், அடுத்த மாதம் நடைபெறப் போகும் சேது சமுத்திரத் திட்ட தொடக்கவிழாவுக்கு சோனியா காந்தி வருவதன் மூலம் எதிர் வருகிற சட்டசபைத் தேர்தலிலும்மஸ்தான்பட்டி ராசி எதிரொலிக்கும் என்றசந்தோஷமான எதிர்பார்ப்பு காங்கிரஸார் மற்றும் திமுகவினர் மத்தியில் நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications