புழுங்க வைத்த அந்நியன்; ரசிகர்கள் கொந்தளிப்பு
சென்னை:
சென்னையில் அந்நியன் திரையிடப்பட்ட திரையரங்கில், குளிர்சாதன இயந்திரம் (ஏ.சி.) செயல்படாததால், ரசிகர்கள் வியர்வைமழையில் நனைந்தனர். கொந்தளித்துப் போன ரசிகர்கள் போராட்டத்தில் குதித்ததால் திரையரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் படம் திட்டமிட்டபடி 10 மணிக்குத் தொடங்கவில்லை. மாறாக 11.30 மணிக்குத்தான் படம் தொடங்கியது. அதிக விலைவைத்து விற்கப்பட்ட டிக்கெட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏ.சி. போடப்படாமல் மின் விசிறிகளை ஓட விட்டிருந்தனர். ஏற்கனவே பகல் முழுவதும் 105 டிகிரி வெயிலில் காய்ந்துகொதித்துப் போய் ஏ.சிக்காக உள்ளே வந்த ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏன் ஏ.சி போடவில்லை என்றுதிரையரங்க ஊழியர்களிடம் ரசிகர்கள் கேட்க, ஒர்க் பண்ணல அதனால போடலை என்ற அலட்சியமான பதில் வந்தது.
இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்களில் சிலர் அருகே உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்குப் போன் செய்து,போலீஸாரை வரவழைத்தனர். அவர்களை முற்றுகையிட்ட ரசிகர்கள், ஏகப்பட்ட பணத்தை டிக்கெட் என்ற பெயரில் எங்களிடம்பிடுங்குகிறார்கள். ஆனால் உள்ளே ஏ.சி. போடவில்லை. கேட்டால் வேலை செய்யவில்லை என்று அலட்சியமாக கூறுகிறார்கள்.
ஏ.சி போடுவதாக கூறித்தானே இத்தனை பணத்தை வாங்குகிறார்கள். இப்படிப் பதில் கூறினால் எப்படி, ஏ.சி போடாவிட்டால்நடப்பதே வேறு என்றனர்.
இதையடுத்து திரையரங்க நிர்வாகிகளிடம் பேசுவதாக போலீஸார் கூறினர். ஆனால் ரசிகர்களை திரையரங்குக்குள் அனுப்பிவைத்து விட்டு அவர்கள் கிளம்பிப் போய் விட்டனா.
இதனால், திரையரங்க ஊழியர்களும் ரசிகர்களின் வேதனையைக் கண்டு கொள்ளாமல், கடைசி வரை ஏ.சி. போடாமல் படத்தைஓட்டி டித்தனர்.
புதிய படங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் இஷ்டம் போல டிக்கெட் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று அரசுஅனுமதித்துள்ளது. மேலும் திரையரங்க பராமரிப்புக்காகவும் ரசிகர்களிடமிருந்தே பணத்தை பறிக்கிறார்கள் திரையரங்கஉரிமையாளர்கள்.
புதிய படங்கள் திரையிடப்படும்போது, திரையரங்க கவுண்டர்களிலேயே அதிக அளவுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.வழக்கமாக 20 ரூபாய்க்கு டிக்கெட் என்றால் புதிய படங்களின்போது அது 50 ரூபாயாக உயர்ந்து விடுகிறது.
இப்படி, ரசிகர்களின் வயிற்றில் அடித்து காசு பார்த்துக் கொண்டிருக்கும் திரையரங்குகள் இருக்கும் வரை தமிழ் சினிமாவுக்கு அரசுஎத்தனை சலுகைகளை அள்ளிக் கொடுத்தாலும் அது தேறவே தேறாது!.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications