ஜார்கண்ட் : என்ஜினுடன் ரயில் மோதி 24 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

கமரியா (ஜார்கண்ட்):

ஜார்கண்ட் மாநிலத்தில், ஒரே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த என்ஜினும் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர்மோதியதில் 24 பேர் படுகாயமடைந்தனர்.

டெல்லியிலிருந்து பூரிக்கு செல்லும் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயில், ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள பிரஜ்பூர் மற்றும்கமரியா ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே நேற்று (திங்கட்கிழமை) இரவு 9.50 மணியளவில் சென்றுகொண்டிருந்தது.

இந்த ரயில் சென்று கொண்டிருந்த அதே தண்டவாளத்தில் ஒரு என்ஜின் நிறுத்தப்பட்டிருந்தது. இது தெரியாமல்அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயில், அந்த என்ஜினுடன் மோதியது.

மோதிய வேகத்தில் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் இந்தப் பெட்டியில்இருந்த 24 பேர் படுகாயமடைந்தனர்.

ஒரே தண்டவாளத்தில் என்ஜினும், ரயிலும் வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்களின்கவனக்குறைவே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+