தொழிலாளர்களை கொடுமைப்படுத்தினால் நடவடிக்கை: மலேஷிய அரசு எச்சரிக்கை
கோலாலம்பூர்:
வெளிநாட்டு தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுமலேஷிய உள்துறை அமைச்சர் அஸ்மி காலித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு மலேஷியா செல்லும் பலர் ஏமாற்றப்படுகின்றனர். இது தவிர முறையானதங்கும் வசதி, சாப்பாடு உட்பட எந்த வசதிகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை.
இந் நிலையில், சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த சுமார் 400 தொழிலாளர்கள் அவர்கள் தங்கும் இடத்திலேயே 2வாரங்களாக அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டது தெரிய வந்தது.
இது தவிர இந்தியாவை சேர்ந்த பத்மராஜ் (வயது 21) என்ற தொழிலாளி சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால்பாதிக்கப்பட்டு இறந்தார். இவர் பணி புரிந்த நிறுவனம் இவருக்கு முறையான சிகிச்சை அளிக்க அளிக்க ஏற்பாடுசெய்யாததால் தான் இறந்ததாக புகார் கூறப்பட்டது.
இந் நிலையில், மலேஷிய உள்துறை அமைச்சர் அஸ்மி காலித் கூறுகையில், மலேஷியாவில் பணிபுரியும்தொழிலாளி அனைவருக்கும் மலேஷிய தொழிலாளர் சட்டப்படி அனைத்து சலுகைகளும் வழங்கப்படவேண்டும். வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் இது பொருந்தும்.
சமீபத்தில் இந்திய தொழிலாளி முறையான சிகிச்சை கிடைக்காமல் இறந்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
இனிமேல் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்து புகார் வந்தால் அந்தநிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்துதொழிலாளர்களை கொண்டு வர தடை விதிக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications