போலி வாக்காளர்: அதிமுக மீது நடவடிக்கை எடுக்க முடியும்-தேர்தல் கமிஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி வாக்காளர்களை சேர்க்கும் அரசியல் கட்சி மீது நடவடிக்கை எடுக்கமுடியும். வாக்காளர்கள் சரியானவர்களா அல்லது போலிகளா என்பதை அரசியல்கட்சிகள் தான் சரி பார்த்து கொடுத்திருக்க வேண்டும் என்று சென்னைஉயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்கூறப்பட்டுள்ளது.

தமிழக வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை அதிமுக சேர்த்து விட்டதாகதிமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் கொடுத்தன. அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களும்,முக்கிய நிர்வாகிகளும் கட்டுக் கட்டாக போலி வாக்காளர்களுக்கானவிண்ணப்பங்களை கொடுத்துள்ளதாகவும் திமுக புகார் கூறியது.

அவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் திமுக கோரியிருந்தது. இந் நிலையில் அதிமுக தேர்தல் பணிக்குழுத்தலைவரும், அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவழக்கை தொடுத்தார்.

அதில், தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தபடி, மற்ற கட்சிகள் செய்தது போல,அதிமுகவும், வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று அவற்றைமொத்தமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க சமர்ப்பித்தது.

ஆனால் கடந்த தேர்தலில் படு தோல்வியைத் தழுவிய திமுக, இந்த விஷயத்தில்அதிமுக மீது தவறான புகார்களைக் கூறி தேர்தல் ஆணையத்தை திசை திருப்பிவருகிறது.

விண்ணப்பங்கள் மீது தேர்தல் ஆணையம் ஆய்வு நடத்தலாம், விசாரணைநடத்தலாம். தவறு இருந்தால் விண்ணப்பதாரர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் விண்ணப்பதைப் பெற்றுக் கொடுத்த ஒரே காரணத்திற்காக சம்பந்தப்பட்டஅரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

ஆனால் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக கொடுத்த புகார்களின் அடிப்படையில்நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு எங்களது தரப்பு விளக்கத்தைப் பெற தேர்தல்ஆணையம் முயற்சிக்கவில்லை. வாய்ப்பு வழங்கவில்லை.

எனவே தனி நபர்கள் கொடுத்த விண்ணப்பங்களை வாங்கி தேர்தல் ஆணையத்தில்கொடுத்த அதிமுக மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும் என்று பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், விளக்கம் அளிக்குமாறு கூறிதேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதையடுத்து தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம்ஆகியவற்றின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த மேமாதம் 30ம் தேதி வரை 16 லட்சத்து 60,000 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு வந்தன.

இதில் 30ம் தேதி மட்டும் ஒரே நாளில் 12 லட்சத்து 70,000 மனுக்கள்கொடுக்கப்பட்டன. இவை அனைத்தும் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டவை.இதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் வந்ததால் விசாரிக்கஉத்தரவிடப்பட்டது.

இந்த விண்ணப்பங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. இப்படிமுறைகேடாக விண்ணப்பங்களை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்க முகாந்திரம்உள்ளது.

விண்ணப்பங்களை வழங்கும் அரசியல் கட்சியினர், அந்த விண்ணப்பதாரர் குறித்துசரி பார்த்த பின்னரே, அவர் கொடுத்துள்ள தகவல்கள் உண்மையானதா என்பதைஅறிந்த பின்னரே தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருக்க வேண்டும்.

இந்த பொறுப்பை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது. விண்ணப்பங்களில் தவறுஇருந்தால், அதை தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்என்று பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+