கோவை குண்டு வெடிப்பு கைதி பரோலில் வந்து திருமணம்
கோவை:
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கைதி இதாயத் கான், நேற்று (ஞாயிற்றுக்கிழமை)காலை பரோலில் வந்து திருமணம் செய்தார். பின்னர் மாலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் கான். ஓய்வு பெற்ற தலைமை ஆசியர். இவரது மகன் இதாயத்கான். இவர், தனது தாயாரின் சகோதரி மகள் உம்னே அஸ்னத்தை சிறு வயதில் இருந்தே காதலித்து வந்தார். அவரையேதிருமணம் செய்வதாகவும் இருந்தார்.
இந் நிலையில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இதாயத்கானும், அவரது அண்ணன்குட்டியும் சிக்கினர். குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
ஆந்திராவில் மறைந்திருந்த இதாயத் கான் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரும், குட்டியும் கோவை சிறையில்அடைக்கப்பட்டிருந்தனர்.
இதாயத் கான் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றாலும் அவரை மணந்து கொள்ளும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றுஅஸ்னத் தனது பெற்றோரிடம் திட்டவட்டமாக கூறி விட்டார். அவரது முடிவில் கடந்த 7 ஆண்டுகளாக எந்த மாற்றமும்ஏற்படவில்லை.
இது மட்டுமல்லாமல், அடிக்கடி கோவை சிறைக்கு சென்று இதாயத் கானை சந்தித்துப் பேசி வந்தார் அஸ்னத். இதையடுத்துஇருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.
திருமணத்திற்கு அனுமதி வழங்குமாறு கோரி கோவை குண்டு வெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இதற்கு தனி நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து இதாயத் கானின் சத்தியமங்கலம் வீட்டிலேயே திருமணநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திருமணம் நடந்தது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு இதாயத் கான், பலத்தபாதுகாப்புடன் சத்தியமங்கலத்திற்கு பரோலில் அழைத்து வரப்பட்டார்.
பின்னர் 10.30 மணிக்கு திருமண நிகழ்ச்சிகள் தொடங்கி 11 மணிக்கு முடிவடைந்தது.மணமக்களை உறவினர்களும், ஊர் மக்களும் வந்திருந்து வாழ்த்தினர். பிற்பகல் 12 மணிக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டதுஅதன் பின்னர் மாலை 4 மணிக்கு இதாயத் கான் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கல்யாணம் முடிந்த ஐந்தரை மணி நேரத்தில் மணமகன் சிறைக்கு கிளம்பியதால், இரு வீட்டாரும் கண்ணீர் வடித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications