நுழைவுத் தேர்வு ரத்துக்கு அவசர சட்டம் கோரி நாளை பாமக போராட்டம்
சென்னை:
நுழைவுத் தேர்வு ரத்தை அமலாக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் இதை வலியுறுத்தி மாணவர்களுடன்ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை சென்னைஉயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மகிழ்ச்சியடைந்திருந்த கிராமப்புற மாணவர்கள்இப்போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வசதியும், வாய்ப்பும் இருப்பவர்கள் சட்டத்திற்குள் நுழைந்து தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கின்றனர்.
நுழைவுத் தேர்வை ரத்து செய்தது அரசின் கொள்கை முடிவு. கொள்கை முடிவு சட்டமாகத் தான் வெளிவந்திருக்க வேண்டும்.ஆனால் அதிமுக அரசு இதற்கு ஒரு சாதாரண அரசு உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதே இதனை சுட்டிக் காட்டி, அவசர சட்டமாக பிறப்பிக் வேண்டும் என்றும், சட்டசபையைகூட்டி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நான் வற்புறுத்தினேன். ஆனால் அரசு அதை கண்டு கொள்ளவில்லை. அப்படிசெய்திருந்தால் இன்றைக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்காது.
இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. நுழைவுத் தேர்வை ரத்து செய்த அரசின் கொள்கை முடிவுக்கு மீண்டும் உயிர்கொடுக்க உடனடியாக ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி பாமக மாணவர்கள் நாளை (28ம் தேதி) சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்குநான் தலைமை தாங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications