வேளாண் பல்கலைக்கழக விழா: ஜெ. இன்று கோவை வருகை
கோவை:
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்றுகோவை வருகிறார். இதையொட்டி கோவையில் டிஜிபி அலெக்சாண்டர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
மேலும் சிறந்த 5 பேராசிரியர்களுக்கு விருதும், 15 விவசாயிகளுக்கு "வேளாண்மை செம்மல் பட்டமும் வழங்குகிறார். மதுரைவேளாண்மை நிர்வாகக் கட்டடம், மேட்டுப்பாளையம் வன ஆராய்ச்சி கல்லூரி மாணவர் விடுதி, ஆழியாறு உயிரித்தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அறை,
கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், திருவான்மியூர், ஆகிய பகுதிகளில் விஞ்ஞான் கிசான் கேந்திரா கட்டடங்களையும்ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்படும் ஜெயலலிதா, காலை 11 மணியளவில்கோவை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பு முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு கோவை அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில்அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு வேளாண்பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்.
பலத்த பாதுகாப்பு:
இதே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் தான் தர்மபுரியில் வைத்து எரிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகுஜெயலலிதா இங்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
இதனால் இந்த விழாவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கவனிப்பதற்காக டிஜிபிஅலெக்சாண்டர் கோவை வந்துள்ளார். அவர் ஜெயலலிதா செல்லும் பாதையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைஆய்வு செய்தார்.
இதற்கிடையே இன்று கோவை வரும் முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுகஎச்சரித்துள்ளது. சாலைப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரக்கோரி ஜெயலலிதா வரும் பாதையை மறித்து போராட்டம்செய்யப்போவதாக திமுக அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications