சென்னையில் சுரங்க ரயில் பாதை
சென்னை:
சென்னையில் 8 கி.மீ. தூரத்திற்கு சுரங்க ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், கொச்சி உட்பட முக்கிய 10 நகரங்களில் சுரங்க ரயில் மற்றும்மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்குவது குறித்து மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஆய்வு நடத்தி வருகிறது.
சென்னை மாநகர ரயில் திட்டம் பற்றிய ஆய்வு சமீபத்தில் முடிக்கப்பட்டு விட்டது. இதன் படி 66 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில்விடப்படவுள்ளது. இதன் விரிவான திட்ட அறிக்கைக்காக தமிழக அரசு ரூ. 3.30 கோடி ஒதுக்கியுள்ளது. 6 மாதத்திற்குள் இந்ததிட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
இந்த மெட்ரோ ரயில் திட்டம் 3 வழிகளில் நிறைவேற்றப்படுகிறது. முதல் திட்டத்தில் வட-தென் சென்னை இணைக்கப்படும். இதன்மொத்த தூரம் 31.54 கி.மீ.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி, அண்ணா சாலை, ஸ்பென்சர்ஸ், சென்ட்ரல், பிராட்வே, திருவொற்றியூர் வரைபாதை போடப்படும். இதில் 8 கி.மீ. தூரம் சுரங்க ரயில் பாதையாகும்.
2வது திட்டப்பாதை கிழக்கு-மேற்கு சென்னைப் பகுதியை இணைக்கும். இதில் கோயம்பேட்டில் தொடங்கி அண்ணா நகர்,எழும்பூர், சென்ட்ரல், கோட்டை, கடற்கரை வரை 13.54 கி.மீ. தூரமாகும்.
இந்த 2 திட்டங்களுக்கான மொத்த மதிப்பீடு சுமார் ரூ. 5,000 கோடியாகும். இந்த இரு திட்டங்களும் இந்த ஆண்டிலேயேதொடங்கப்பட்டு 2010ம் ஆண்டிற்குள் முடிக்கப்படும்.
3வது திட்டப்படி, அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் திருவான்மியூர் வரை ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதன் மொத்ததூரம் 21.68 கி.மீ. 2016ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த திட்டப் பணிகள் தொடங்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications