கர்நாடக அணையிலிருந்து கூடுதல் நீர் திறப்பு
மேட்டூர்:
கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து இன்று காலை முதல் வினாடிக்கு 5000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையை திறந்துள்ளனர். நேற்று முதல்வினாடிக்கு 1000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டது. இந் நிலையில் அணைக்கு தொடர்ந்து அபரிமிதமான நீர் வரத்துஇருப்பதால் கூடுதல் நீரைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, இன்று காலை முதல் வினாடிக்கு 5000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுகிறது. இந்த நீர் இன்னும் நான்கு நாட்களில்மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மற்றொரு முக்கிய அணையான கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.இதுவும் நிரம்பி இந்த அணையும் திறக்கப்பட்டால் மேட்டூர் அணைக்கு மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications