அயோத்தி தாக்குதல்: ராமதாஸ், தமுமுக கண்டனம்
சென்னை:
அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அரசியலாக்க பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் முயலக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் மிக துரதிர்ஷ்டவசமான, கடும் கண்டனத்துக்குரியது. பாதுகாப்புப் படையினரின் துணிச்சலானநடவடிக்கையால் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டனர், தற்காலிக கோவில் அமைந்துள்ள இடம் பாதுகாக்கப்பட்டுவிட்டது.
இந்தப் பிரச்சினையை அரசியலாக்க பாஜக, வி.எச்.பி. உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் முயல்வது க ண்டனத்துக்குரியது.இதை அரசியலாக்கும் விதமாக பந்த், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் என பாஜக அறிவித்திருப்பது சரியல்ல. மக்களைப் பிரிக்கநினைக்கும் முயற்சி இது என்றார் ராமதாஸ்.
முஸ்லீம் அமைப்பும் கண்டனம்:
இத் தாக்குதலை தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் கண்டித்துள்ளது.
அயோத்தியில் ஊடுறுவிய தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதற்காக பாதுகாப்புப் படையினருக்கு தமுமுக பாராட்டும்தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications