சென்னை காவல் நிலையங்களில் ஐ.எஸ்.ஓ. ஆய்வு
சென்னை:
சென்னை காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் வழங்குவது தொடர்பான ஆய்வுகளை ஐ.எஸ்.ஓ. நிறுவன அதிகாரிகள்சென்னையில் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் ஏற்கனவே ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்றுள்ளது. தற்போது சென்னை நகரின் 14காவல் நிலையங்கள், மத்திய குற்றப் பிரிவு, சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை ஆகியவை ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்பெற விண்ணப்பித்துள்ளன.
இதைத் தொடர்ந்து மும்பையிலிருந்து ஐ.எஸ்.ஓ. நிறுவன அதிகாரிகளான கணேஷ், வெங்கடராமன், சங்கரலிங்கம் ஆகியோர்சென்னை வந்து நேரடி ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
முதலில் மாநகர காவல்துறை ஆணையர் நடராஜுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் தரச்சான்றிதழுக்காக விண்ணப்பித்துள்ள காவல் நிலையங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டனர்.
முதலில் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு நடந்தது. அதன் பின்னர் வண்ணாரப்பேட்டை,சிந்தாதிரிப்பேட்டை, பரங்கிமலை ஆகிய காவல் நிலையங்களில் ஆய்வு நடந்தது.
காவல் நிலையங்களில் விசாரணை நடத்தப்படும் முறை, புகார் கூற வரும் பொதுமக்களிடம் போலீஸார் மேற்கொள்ளும்அணுகுமுறை மற்றும் குற்றப் பதிவேடுகள் பராமரிப்பு, பொதுமக்களின் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுகள்நடத்தப்பட்டன.
வெள்ளிக்கிழமை வரை இந்த ஆய்வு நடக்கிறது. அதன் பின்னர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஐ.எஸ்.ஓ. நிறுவனத்திற்குஆய்வறிக்கை அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை ஆந்திர காவல்துறை, டெல்லி காவல் துறை ஆகியவை மட்டுமே ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications