நுழைவுத் தேர்வு: மத்திய அரசு மீது பழி போடக்கூடாது- ராமதாஸ்
சென்னை:
நுழைவுத் தேர்வு ரத்து விவகாரத்தில் மத்திய அரசு மீது வீண் பழி போடக்கூடாது பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சாலைப் பணியாளர்களுக்குமீண்டும் வேலை வழங்க முதல்வர் ஜெயலலிதா மறுத்து வருகிறார்.
ஆனால் இன்னொரு புறத்தில் நுழைவுத் தேர்வு விஷயத்தில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவதைத் தவிர வேறுவழியில்லை என்று கூறுகிறார். நுழைவுத் தேர்வு ரத்து வெறும் உத்தரவாக வெளியிடப்பட்ட போது இது வெறும் கண்துடைப்புநாடகமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
எனவே தான் இதனை ஒரு சட்டமாக கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினோம். இப்போதும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்கள் மீதும் பரிவு நடவடிக்கை எடுத்து விட்டு தற்போது ஜெயலலிதா,உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டியும், எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போட்டு தப்பிக்க பார்க்கிறார்.
மத்திய அரசின் விதிமுறைகள் தடையாக இருக்கிறது என்றால் அந்த விதிமுறைகளை மாற்றுவதற்கு முதல்வரும், தமிழக அரசும்எடுத்த நடிவடிக்கை என்ன? தமிழ்நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் தான் மத்தியில் அமைச்சர்களாக உள்ளனர்.அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது முதல்வரின் பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications