ஜெ.வை விமர்சிப்பதா? ராமதாஸுக்கு அமைச்சர் கண்டனம்
சென்னை:
நுழைவுத் தேர்வு பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறு பேசுவதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை பிளஸ் டூதேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தபோது பெரும்பாலான மாணவர்களும்,பெற்றோர்களும் அதை வரவேற்றனர்.
அரசின் இந்த அறிவிப்பை முதலில் ஆதரித்த ராமதாஸ், பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டார். கிராமப்புறமாணவர்களின் நலன் கருதியே நுழைவுத் தேர்வு முறையை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்தார்.
ஆனால் மத்திய அரசின் விதிமுறைகளைக் காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்தது. மேலும்இதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தபோது, உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
எனவே தான் வேறு வழியின்றி பழைய முறைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெறும் என முதல்வர் அறிவித்தார்.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவை முதல்வர் எடுத்துள்ளார். ஆனால் இதை ராமதாஸ்விமர்சித்துள்ளார். அவரது விமர்சனத்தில் அறிவார்ந்த வாதம் இல்லை.
நுழைவுத் தேர்வு விவகாரத்தில் சட்டத்திற்குப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்து விட்டது. ஆனால்மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை நீக்குவதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலின் சில விதிமுறைகள் இடையூறாகஇருக்கின்றன.
இதுபோன்ற தடைகளை நீக்குவதற்கு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் பங்கு வகிக்கும் தமிழக மத்திய அமைச்சர்கள், ராமதாஸ்இடம் பெற்றுள்ள கூட்டணியின் எம்.பிக்கள் எந்த முயற்சியும் செய்யாதது ஏன் என்று மக்கள் கேட்கிறார்கள்.
கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக உள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளை நீக்குமாறு மத்தியில்சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள தனது மகன் அன்புமணியிடம் ராமதாஸ் கூறாதது ஏன்?
மக்களின் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத ராமதாஸ், தமிழக அரசை விமர்சிக்கத் தகுதியில்லை. தாங்கள் வெற்றிபெற்று கோட்டைக்குள் நுழைந்து ஆட்சியமைத்தால் நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
டெல்லி செங்கோட்டையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டே எதையும் செய்ய முடியாத ராமதாஸ், செயின்ட் ஜார்ஜ்கோட்டையைக் கைப்பற்றி என்ன செய்யப் போகிறார் என்று மக்கள் கூறுகிறார்கள்.
எனவே இனிமேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறு அறிக்கைகளை வெளியிடுவதை ராமதாஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சண்முகம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications