ஜெவை புகழ்ந்த காங் எம்எல்ஏவுக்கு அடி, உதை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி பேசி காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.விநாயகமூர்த்தி, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
இவர் மூப்பனாரின் மிக நெருங்கிய நண்பராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில், சென்னையின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்தது உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்காக முதல்வர்ஜெயலலிதாவை அவர் புகழ்ந்து பேசினார். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
விநாயகமூர்த்திக்கு எதிராக ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் அணி திரண்டனர். அவர் மீது கட்சி மேலிடம் கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். வட சென்னை காங்கிரஸ் கட்சியோ, விநாயகமூர்த்தியை புறக்கணிக்கும்போராட்டத்தை அறிவித்தது.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் விநாயகமூர்த்தி வியாழக்கிழமை கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனுக்கு வருகை தந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தொண்டர்கள் (பெரும்பாலும் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள்)விநாயகமூர்த்தியைப் பார்த்ததும் ஆத்திரமடைந்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.
அவரை ஒருமையிலும் கெட்ட வார்த்தைகளாலும் திட்டிய காங்கிரசார், ஜெயலலிதாவிடம் விலைபோன விநாயகமூர்த்தியேஎன்று கூறிக் கொண்டே ஆவேசமாக அடிக்கத் தொடங்கினர்.
வயதில் முதியவரான அவருக்கு முகத்திலும் முதுகிலும் சரமாரியாக குத்து விழுந்தது. தொண்டர்கள் அவரை சுற்றி வளைத்துஅடித்தனர். அய்யோ அம்மா என அலறிய விநாயகமூர்த்தியை சில தொண்டர்கள், வாசன் ஆதரவாளர்களிடமிருந்து மீட்டுபாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் சத்தியமூர்த்தி பவனுக்கு விரைந்து வந்தனர். இத் தாக்குதல் தொடர்பாககாங்கிரசார் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசிய மூத்த எம்எல்ஏ ஒருவருக்கு தொண்டர்களே தர்ம அடியைக் கொடுத்தது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications