ராமேஸ்வரம்: ஜெயேந்திரருக்கு இன்றும் அனுமதி மறுப்பு- மன்னிப்பு கேட்டு மீண்டும் அவமானம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் கோவில் கருவறைக்குள் நுழைய ஜெயேந்திரருக்கு இன்றும் அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயேந்திரர் கோபத்துடன் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்று விட்டார்.
ஆனால் நேற்று ஜெயேந்திரர் அங்கு வந்தபோது அவரை வரவேற்க யாரும் இல்லை. பூரண கும்ப மரியாதையும்கொடுக்கப்படவில்லை. இருப்பினும் இதைப் பொருட்படுத்தாத ஜெயேந்திரர் தன்னுடன் வந்த பக்தர்களுடன் கோவிலுக்குள்சென்றார்.
ராமநாதசுவாமி சன்னதிக்கு வந்த அவர், கோவில் கருவறைக்குள் நுழைந்து சாமி கும்பிட முயன்றார். ஆனால் அவரைகோவிலின் இணை ஆணையர் சுப்பிரமணியம் தடுத்து நிறுத்தினார். கருவறைக்குள் ஜெயேந்திரர் நுழைய அனுமதி தரவேண்டாம் என தனக்கு அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் அனுமதி இல்லாமல் ஜெயேந்திரரை கருவறைக்குள் செல்லஅனுமதிக்க முடியாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதனால் ஜெயேந்திரருடன் வந்தவர்கள் ஆத்திரமடைந்தனர். ஜெயேந்திரரை உள்ளே நுழைய அனுமதித்தே ஆக வேண்டும்என்று அவர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.
ஆனால் ஜெயேந்திரரை உள்ளே விட அரசு தடை விதித்துள்ளதால் அனுமதிக்க முடியாது என்று கோவில் அதிகாரிகள்திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து தன்னுடன் வந்தவர்களை சமாதானப்படுத்திய ஜெயேந்திரர் வெளியில் இருந்தபடியே சாமி கும்பிட்டு விட்டுவெளியே வந்தார்.
பின்னர் தனுஷ்கோடி சென்று கடற்கரைப் பகுதியில் 51 வேத விற்பன்னர்கள் நடத்திய பூஜையில் கலந்து கொண்டார். அதன்பிறகு ராமேஸ்வரத்தில் உள்ள சங்கர மடம் சென்று அங்கும் பூஜையில் ஈடுபட்டார்.
ஜெயேந்திரரை அனுமதிக்காதது குறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்ட போது, வழக்கமாக முன் அனுமதி பெற்று வருவார்.ஆனால் நேற்று அவர் முன் அனுமதி கடிதம் எதுவும் கொண்டு வரவில்லை என்றனர்.
இந் நிலையில் நேற்று சங்கரமடம் சார்பில் ராமநாதசுவாமி கோவில் நிர்வாகிகளுக்கு அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டது.அதில் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய அனுமதிக்குமாறு ஜெயேந்திரர் கோரியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் நேற்று இரவிலேயே சங்கர மடத்திற்கு சென்று ஜெயேந்திரரை சந்தித்து, அவரிடம்கோவில் கருவறைக்குள் அனுமதிக்காததற்கு மன்னிப்பு கோரினர்.
மேலும் அனுமதி கோரி நீங்கள் கொடுத்துள்ள கடிதத்தை சென்னையில் உள்ள இந்து அறநிலையத் துறைக்கு அனுப்பிவைத்துள்ளோம் அங்கிருந்து அனுமதி கிடைத்தால் கருவறைக்குள் அனுமதிப்போம் என்றனர்.
இதையடுத்து ஜெயேந்திரர் இன்று காலை கோவிலுக்கு செல்ல தயாரானார். ஆனால் அப்போது கோவில் நிர்வாகிகளும்தலைமை அர்ச்சகர் ரங்கநாத குருக்களும் ஜெயேந்திரர் தங்கியிருந்த சங்கர மடத்திற்கு வந்தனர்.
இன்னும் இந்து அறநிலையத் துறையின் அனுமதி கடிதம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும், தாங்கள்அனுப்பிய பேக்சுக்கு பதில் வரவில்லை என்றும், எனவே இன்றும் கோவில் கருவறைக்குள் சென்று சாமி கும்பிடஅனுமதிக்க இயலாது என்றும் அவர்கள் ஜெயேந்திரரிடம் தெரிவித்தனர்.
இதனால் கோபமடைந்த ஜெயேந்திரர், யாருடனும் பேசாமல் உடனடியாக ராமேஸ்வரத்திலிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். சுமார் எட்டரை மணியளவில் சங்கர மடத்திலிருந்து வேகமாக வெளியேறிய ஜெயேந்திரர் காரில் ஏறிச்சென்றார்.
அவர் எங்கு செல்கிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை. அவரைத் தொடர்ந்து சங்கர மட ஆதரவாளர்களும்கார்களில் கிளம்பிச் சென்றனர்.
மன வருத்தத்துடன் ஜெயேந்திரர் கிளம்பிச் செல்வதாகவும், தான் எங்கே செல்லப் போகிறேன் என்பதையும்ஜெயேந்திரர் தெரிவிக்கவில்லை என்றும் சங்கர மட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் கோவில் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய நேபாள மன்னர், சிருங்கேரி சங்கராச்சாரியார்,காஞ்சி சங்கராச்சாரியார் ஆகியோருக்கு மட்டும் சிறப்பு அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கக்கது.
பாஜக கண்டனம்:
ராமேஸ்வரம் கோவிலுக்குள் நுழைய ஜெயேந்திரருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பாஜக துணைத் தலைவர்வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்றஜெயேந்திரர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் தமிழக அரசின் நடவடிக்கை அதிருப்தியையும், அதிர்ச்சியையும் தருகிறது. இந்த சம்பவம்குறித்து கோவில் நிர்வாகிகளிடம் அரசு விளக்கம் கேட்க வேண்டும்.
வரும் 21ம் தேதி சென்னையில் தொடங்கும் 3 நாள் செயற்குழுக் கூட்டத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள்உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். 24ம் தேதி சென்னையில் மாபெரும்பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்றார் நாயுடு.












Click it and Unblock the Notifications