விநாயகமூர்த்தி வீடு தாக்குதல்; காங். கவுன்சிலர் கைது
சென்னை:
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், சென்னை பூங்காநகர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.ஜி.விநாயகமூர்த்தியின் வீடுமற்றும் கார் மீது 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்கியது. இதுதொடர்பாக வட சென்னை காங்கிரஸ் தலைவரும்,மாநகராட்சி காங்கிரஸ் தலைவருமான ராயபுரம் மனோவை போலீஸார் கைது செய்தனர்.
நிகழ்ச்சியில் அவர் ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்களைப் புகழ்ந்து பேசினார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும்சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் நல்லது செய்யும்போது பாராட்டுவதில் தவறில்லை, ஒரேயடியாக யாரையும் எதிர்க்கக்கூடாது என்று விநாயகமூர்த்தி விளக்கம் அளித்தார்.
ஆனால் விநாயகமூர்த்தியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் அவரை எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கக் கூடாது என்று கூறிவட சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.
இந் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த விநாயகமூர்த்தியை ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள்சரமாரியாகத் தாக்கினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு பேரை கட்சியிலிருந்து தற்காலிகப் பணி நீக்கம்செய்து வாசன் உத்தரவிட்டார்.
இந்தச் சூழ்நிலையில் விநாயகமூர்த்தியின் வீட்டில் அதிருப்தி கோஷ்டியினர் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்நடத்தியுள்ளனர். விநாயகமூர்த்தியின் வீடு சென்னை அண்ணா நகர் மேற்கு, 13வது தெருவில் உள்ளது. அங்குள்ள கனகதாராஅடுக்குமாடிக் குடியிருப்பில் விநாயகமூர்த்தி வசிக்கிறார்.
இரவு 9 மணிவாக்கில் மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் அங்கு வந்தனர். கையில் பயங்கர ஆயுதங்களை அவர்கள்வைத்திருந்தனர். வீட்டின் கீழே இருந்த விநாயகமூர்த்தியின் கார் மீது சோடா பாட்டில்களை சரமாரியாக வீசி கண்ணாடிகளைநொறுக்கினர். பின்னர் வீட்டுக்குள்ளும் சோடா பாட்டில்களை வீசினர்.
இதனால் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த விநாயகமூர்த்தி, அவரது மனைவி கற்பக சுந்தரி, மகன், மகள்கள் பீதியடைந்துகாப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்துக் கொண்டிருப்பவர்கள் திரண்டனர்.இதைப் பார்த்ததும் 8 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
உடனடியாக திருமங்கலம் காவல் நிலையத்தில் விநாயகமூர்த்தி புகார் கொடுத்தார். வட சென்னை காங்கிரஸ் தலைவர் ராயபுரம்மனோவின் தூண்டுதலின் பேரில் தான் இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாக தனது புகாரில் விநாயகமூர்த்தி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இரவோடு இரவாக ராயபுரம் மனோவைப் போலீஸார் கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். ராயபுரம்மனோவைக் கைது செய்ய போலீஸார் முயன்றபோது அவரது ஆதரவாளர்கள் போலீஸாரை தாறுமாறாகப் பேசி தகராறுசெய்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது.
முடிவு தெரியும் வரை விடப்போவதில்லை:
தாக்குதல் குறித்து விநாயகமூர்த்தி கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் பல திட்டங்களை குடியரசுத் தலைவர் அப்துல்கலாமே பாராட்டியுள்ளார். சுனாமி நிவாரணப் பணிகளுக்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனேபாராட்டியுள்ளார்.
சட்டம் ஒழுங்கைக் காக்க எடுத்து வரும் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டிலும், கல்வியில் சிறந்தஇடத்தில் இருப்பதற்காக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கும், சிவகங்கை கூட்டறவு வங்கிக்கு கூடுதல்நிதி ஒதுக்கியதற்காக நிதியமைச்சர் ப.சிதம்பரமும் ஜெயலலிதாவைப் பாராட்டியுள்ளனர்.
அந்த ரீதியில் தான், எனது தொகுதியில், ஆசியாவிலேயே மிகப் பெரிய அரசு மருத்துவமனையை அமைத்ததற்காக பாராட்டிப்பேசினேன். இதில் ஒரு தவறும் இல்லை.
இந்தக் காரணத்திற்காக என்னை தாக்கியதாக நான் நினைக்கவில்லை. வேறு எதையோ மனதில் வைத்து இந்தத் தாக்குதலைதொடுத்துள்ளார்கள். தாக்குதலைத் தூண்டி விட்டவர் ராயபுரம் மனோதான்.
ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், யாரோ சம்பந்தமில்லாத நான்கு பேர் மீது வாசன் நடவடிக்கைஎடுத்துள்ளார். மனோ, வாசனின் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த விஷயத்தில் இனியும் பொறுமை காப்பதில் புண்ணியமில்லை. நாளை (சனிக்கிழமை) காலை சத்தியமூர்த்தி பவனில் நான்உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இந்த விஷயத்தில் ஒரு முடிவு தெரியும் வரை நான் விடப் போவதில்லை என்றுகூறினார் விநாயகமூர்த்தி.
சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களோடு உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், ஜி.கே.வாசன் மீது பகிரங்கமாகபுகார் கூறியுள்ளதாலும் சத்தியமூர்த்தி பவனில் இன்று பரபரப்பான சம்பவங்களுக்குப் பஞ்சமிருக்காது என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications