ராயபுரம் மனோ மீது வழக்கு மேல் வழக்கு
சென்னை:
![]() |
காங்கிரஸ் எம்.எல்.ஏ. விநாயகமூர்த்தியின் வீடு மீது தாக்கிகுதல் நடத்தியதாக வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்ராயபுரம் மனோ மீது மேலும் ஒரு வழக்கு போடப்படும் எனத் தெரிகிறது.
ஜி.கே. வாசனின் தீவிர ஆதரவாளரும் இளங்கோவனின் பரம எதிரியுமான ராயபுரம் மனோ வட சென்னையில் தாதாவேலைகளுக்கு பேர் போனவர். மாநகராட்சியில் கராத்தே தியாகராஜனை சமாளிக்கும் பலம் படைத்த சில கவுன்சிலர்களில்இவரும் ஒருவர்.
முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ விநாயகமூர்த்தியை அவரது வயதையும் பொருட்படுத்தாமல்தூக்கிப் போட்டு பந்தாடியது மனோவின் டீம். இதையடுத்து மனோ கைது செய்யப்பட்டார். நேற்று அவர் ஜாமீனில்விடுதலையானார்.
அவரை அவரது ஆதரவாளர்கள் மாலை மரியாதையோடு, பட்டாசு வெடித்து, மேள தாளம் முழங்க சிறையில் இருந்துஅழைத்துச் சென்றனர்.
இந் நிலையில் மனோ மீது இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் ஐஸ்ஹவுஸ் தியாகு, சென்னை மாநகர கூடுதல்ஆணையர் டி.கே.ராஜேந்திரனிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், விநாயகமூர்த்தி தொடர்பான பிரச்சினையில் நான் ராயபுரம் மனோவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைவெளியிட்டிருந்தேன். இதையடுத்து ராயபுரம் மனோவின் ஆட்கள் என்று கூறிக் கொண்டு நான்கு பேர் வந்து என்னை சந்தித்துமிரட்டினர்.
துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவோம் என எச்சரித்தனர்.
இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ராயபுரம் மனோ மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்படும்எனத் தெரிகிறது.
மேலும் விநாயகமூர்த்தியின் வீட்டைத் தாக்கியதாகவும் அவர் மீது வழக்குப் போடப்படும் என்று கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications