தமிழகத்தில் மழை: மேட்டூருக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்துஅதிகரித்துள்ளது.
இதனால் அணையைக் காக்க உபரி நீரை தமிழகத்திற்குத் திறந்து விட்டது கர்நாடகம். இந்த நீர் மேட்டூர் அணையை அடைந்துவந்தது.
இந் நிலையில் மழை குறைந்ததால் கடந்த சில நாட்களாக கபிணியில் மீண்டும் நீரை சேமிக்க ஆரம்பித்தது கர்நாடகம்.அதிலிருந்து திறந்து விடப்பட்டு வந்த நீர் வெகுவாக குறைக்கப்பட்டு வினாடிக்கு 5,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டது.இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்தது.
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தின் சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
திங்கள்கிழமை மாலை வரை வினாடிக்கு 8,765 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலை மாறி இன்று காலை முதல் வினாடிக்கு13,573 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இப்போது அணையின் நீர் மட்டம் 70 அடியாக உள்ளது. சேலம் மாவட்ட குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து 900 கன அடிநீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.
கேரளாவின் வய நாடு மற்றும் கர்நாடகத்தின் மேற்குப் பகுதிகளில் அடுத்த வாரம் பருவ மழை தீவிரமடையும் என்று வானிலைஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த வாரம் முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications