ஜெ. சொத்து குவிப்பு வழக்கால் தமிழக அரசுக்கு ரூ. 110 கோடி செலவு!
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு விசாரணைகளுக்காக தமிழக அரசு இதுவரை ரூ. 110 கோடி செலவு செய்துள்ளது.இத் தகவலை ஜெயலலிதாவின் வழக்கறிஞரே தெரிவித்தார்.
இளவரசியின் சார்பில் மனுவை தாக்கல் செய்த ஜெயலலிதாவின் வழக்கறிஞரும் அதிமுக எம்பியுமான ஜோதி இன்றுநீதிமன்றத்தில் ஆஜாராகி வாதாடினார். வழக்கு விசாரணை தினம்தோறும் நடப்பதால் ஞாயிற்றுக்கிழமையான இன்றும்விசாரணை நடந்தது.
அப்போது ஜோதி கூறுகையில்,
ஜெயலலிதாவை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் தான் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில்மூன்றாவது நபர் ஒருவரை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் தான் அரசுத் தரப்பு (ஜெயலலிதாவுக்கு எதிர் தரப்பு)செயல்படுகிறது.
இந்த சொத்துக் குவிப்பு விசாரணைகளுக்காக தமிழக அரசு இதுவரை ரூ. 110 கோடி செலவு செய்துள்ளது.
இந்த வழக்கை ஜெயலலிதா நினைத்திருந்தால் முதல்வரானவுடன் வாபஸ் பெற்றிருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை.காரணம் இது ஒரு பொய் வழக்கு. இந்த வழக்கில் விசாரணையை சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை என அவர் நினைத்தார்.இதுவரை 12க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்து அவற்றில் வெற்றி கண்டுள்ளார் ஜெயலலிதா.
இளவரசி விஷயத்தில் அவருக்கு எதிராக இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் ஏற்கத்தக்கவையே அல்ல.அந்த ஆவணங்கள் அனைத்தும் ஜெராக்ஸ் காப்பிகள், அல்லது கையால் எழுதப்பட்டவை அல்லது டைப் செய்யப்பட்டவை.அவை சான்றிதழ் பெறப்பட்டவையோ அல்லது ஒரிஜினல் காப்பிகளோ அல்ல.
தங்களது வசதிப்படும்போது ஒரிஜினல் காப்பிகளையும் பிற நேரங்களில் ஜெராக்ஸ் காப்பிகளையும் அரசுத் தரப்புநீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறது. ஒரிஜினல் ஆவணங்களை சமர்பிப்பதில் அரசுத் தரப்புக்கு என்ன பயம்?.
ஜெயலலிதா மீதான இந்த வழக்கு போபார்ஸ் கேஸ் மாதிரித் தான். அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தூக்கி எறிந்தது.அது போலவே இந்த வழக்கும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் போடப்பட்டுள்ளது என்றார் ஜோதி.
இதையடுத்து விசாரணையை நாளைக்கு நீதிபதி பச்சேபுரே ஒத்தி வைத்தார். ஆனால், சில பணிகள் இருப்பதால் இதைசெவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்குமாறு ஜோதி கேட்டுக் கொண்டார். இதையடுத்து வழக்கு செவ்வாய்ககிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications