அந்தமானில் நிலநடுக்கம்: குலுங்கியது சென்னை- சுனாமி பயத்தால் மக்கள் ஓட்டம்
சென்னை:
சென்னை நகரின் சில பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள்குலுங்கின. ஆயினும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழகத்தில் நிலநடுக்கம் ஏதும் பெரிய அளவில் ஏற்படவில்லை. இருப்பினும் கடல்கொந்தளிப்பு, கடல் நீர் உள் வாங்குதல் உள்ளிட்டவை கடலோர மாவட்டங்களில் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
இந் நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அந்தமான், நிக்கோபார் தீவுகளை மையமாகக் கொண்டு பெரும் நில நடுக்கம்ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7 ரிக்டராக பதிவானது. இந்த நில நடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டது.
இரவு 9.30 மணியளவில் மத்திய மற்றும் வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.கோயம்பேடு, அயனாவரம், வில்லிவாக்கம், திருமங்கலம், பெரம்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், மயிலாப்பூர்,தி.நகர், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் அதிர்ந்துள்ளன, பொருட்கள் ஆடியுள்ளன.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருந்தவர்கள் நில நடுக்கத்தை உணர்ந்ததும் பீதியடைந்து மாடிகளிலிருந்து இறங்கிவெளியேறினர். வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் சாலைகளிலும், தெருக்களிலும் குழுமினர்.
கோயம்பேடு பஸ் நிலையம் அருகே உள்ள10 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் 500க்கும் மேற்பட்டவர்கள்வீடுகளை விட்டு வெளியேறினர். அந்தக் கட்டடத்தின் 4 மாடிகளில் நில நடுக்கம் நன்றாக உணரப்பட்டுள்ளது.
கிரீம்ஸ் சாலை பகுதியில் குடியிருக்கும் பாஜக அகில இந்திய செயலாளர் இல.கணேசனும் தனது வீட்டில் நில நடுக்கத்தைஉணர்ந்துள்ளார். கட்டிலில் படுத்திருந்தபோது கட்டில் ஆடியுள்ளது. வீட்டில் இருந்த பொருட்களும் ஆடியுள்ளன. இந்த நிலநடுக்கம் சில விநாடிகளே நீடித்தது.
ரிக்டர் அளவுகோலில் இது 7 ரிக்டராக பதிவாகியுள்ளது. இருப்பினும் இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி அலைகள் ஏற்படவாய்ப்பில்லை என்று பூகம்பவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தூக்கம் போனது:
இந்த திடீர் நில நடுக்கம் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இரவு முழுவதும் மக்களுக்குத் தூக்கம்போயிற்று. பலர் வீட்டிற்கு வெளியேயே கட்டிலைப் போட்டுத் தூங்கியதைப் பார்க்க முடிந்தது.
இதேபோல கடந்த முறை சுனாமி தாக்கிய பட்டினப்பாக்கம், கொட்டிவாக்கம், மெரீனா கடற்கரை ஆகிய பகுதிகளில்ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் படுத்துத் தூங்காமல் அவர்களை போலீஸார்அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ், மாநகராட்சி ஆணையர் விஜயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இரவுநெடுநேரம் மெரீனா கடற்கரையில் முகாமிட்டு கடல் கொந்தளிப்பு ஏற்படுகிறதா என்பதைக் கண்காணித்தவாறு இருந்தனர்.
நில நடுக்கம் காரணமாக லேசான கடல் கொந்தளிப்பு இருந்தாலும் சுனாமி அபாயம் இல்லை என்று அதிகாரிகள்விளக்கியுள்ளதால் சென்னை மக்கள் அதிக பீதியடையவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications