காவிரி: மத்திய குழு இன்று மேட்டூர் வருகை
மேட்டூர்:
கர்நாடக மாநில அணைகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய ஆய்வுக்குழு இன்று (சனிக்கிழமை) மேட்டூர்அணையை பார்வையிடுகிறது.
தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும், முதல்வர்ஜெயலலிதாவும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இதையடுத்து கர்நாடக, தமிழக அணைகளை பார்வையிட மத்தியகுழுவை அனுப்புவதாக பிரதமர் உறுதியளித்தார்.இதன்படி மத்திய நீர் ஆணைய உறுப்பினர் அஹூஜா, நீர்வளத்துறை அமைச்சக திட்ட அதிகாரி பரத்வாஜ், விவசாயத்துறைஅமைச்சக இணை செயலாளர் சம்சேர் சிங் ஆகியோர் நேற்று காலை பெங்களூர் வந்தனர்.
இவர்கள் பெங்களூரில் கர்நாடக நீர்ப்பாசனத் துறை செயலாளர் மகேஷ், காவிரி நீர்ப்பாசன கழக தலைவர் பரத்லால்,ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் விதான் செளதாவில் தலைமை செயலாளர் மிஸ்ரா மற்றும் உயரதிகாரிகளுடன்மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
மத்திய குழுவினரிடம், கர்நாடக தலைமை செயலாளர் மிஸ்ரா கூறுகையில், கர்நாடகத்திலும், தமிழ்நாட்டிலும் தற்போது நல்லமழை பெய்து வருகிறது. கடந்த வருடம் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு 211 டிஎம்சி தண்ணீர் சென்றுள்ளது.
இந்த வருடம் இதுவரை 42.7 டிஎம்சி தண்ணீர் சென்றுள்ளது.இன்னும் 13.64 டிஎம்சி தண்ணீர் தான் கொடுக்க வேண்டியுள்ளது.ஆனால் தமிழகம் 18.19 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறது. இப்போது ஒரு நாளைக்கு 3.5 டிஎம்சி தண்ணீர்செல்கிறது.
இன்னும் 3 அல்லது 4 நாட்களில் கர்நாடகம் கொடுக்க வேண்டிய தண்ணீர் எல்லாம் போய் சேர்ந்து விடும் என்று கூறினார்.
பின்னர் மத்திய குழுவினர் கபினி, மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந் நிலையில்,இன்று (சனிக்கிழமை) மேட்டூர் அணையை பார்வையிட்டு, அணை நீர் வரத்து, இருப்பு மற்றும் பாசனத் தேவைகள் குறித்துஅதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.
இந்த ஆய்வறிக்கை திங்கட்கிழமை பிரதமரிடம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய குழுவினர் தெரிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications