நீர் வரத்து அதிகரிப்பு; ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை திறப்பு?
பெங்களூர்:
மைசூரில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியுள்ளதால் அந்த அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு விநாடிக்கு20,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணை இன்னும் ஓரிரு நாட்களில் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சில நாட்களில்விவசாயத்திற்காக அணை திறக்கப்படும் என்று தெரிகிறது.கர்நாடகத்தின் கபினி அணை ஏற்கனவே நிரம்பி விட்டதால் அந்த அணையிலிருந்து உபரி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டுவருகிறது. ஆரம்பத்தில் விநாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தற்போதைய நிலையில், விநாடிக்கு 30,000 கனஅடி நீர் வரை வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந் நிலையில் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பத் தொடங்கியுள்ளது. அந்த அணையின் மொத்த கொள்ளளவு 124 அடிஆகும். தற்போது அணையில் 120 அடியைத் தாண்டி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அணைக்கு விநாடிக்கு 29,000 கன அடிநீர் வந்து கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அணையைத் திறக்க கர்நாடக அரசு முடிவு செய்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அணையிலிருந்துவிநாடிக்கு 20,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பானஇடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கபினி அணைக்கு தொடர்ந்து நல்ல நீர் வரத்து உள்ளது. அணைக்கு விநாடிக்கு 31,988 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. விநாடிக்கு 30,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.
கர்நாடகத்தின் இரு முக்கிய அணைகளிலும் கணிசமான அளவுக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் தற்போது 85 அடி நீர் இருப்பு உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 41,025 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. ஆடிப் பெருக்கு விழாவுக்காக அணையிலிருந்து விநாடிக்கு12,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாசனத்திற்காக அணையைத் திறக்க வேண்டுமானால் குறைந்தது 90 (மொத்தக்கொள்ளளவு 124) அடியாவது அணையில் நீர் இருக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் 90 அடி இலக்கை மேட்டூர் அணை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே சில நாட்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில்எழுந்துள்ளது.
இந்தத் தண்ணீர் குறுவை சாகுபடிக்கு பெரிய அளவில் உதவாது. மாறாக, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு முழுமையானஅளவில் பயன் தரும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications