காவிரி: தரம்சிங்குடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு
சென்னை:
கர்நாடக முதல்வர் தரம்சிங்கை தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர்நேரில் சந்தித்து, நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி தமிழகத்திற்குரிய காவிரி நீரை திறந்து விடுமாறு கோரிக்கைவிடுத்தனர்.
காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை விடுவிப்பது தொடர்பாக சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமர்மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதையடுத்து 3 நிபுணர்கள் கொண்ட குழு இரு மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.அக்குழுவினர் இரு மாநில அணைகளில் நீர் இருப்பை ஆய்வு செய்தனர். இந் நிலையில் தமிழக அமைச்சர்கள் குழுவை முதல்வர்ஜெயலலிதா பெங்களூருக்கு அனுப்பி வைததார். இக்குழுவில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன்,
தலைமைச் செயலாளர் நாராயணன், பொதுப்பணித்துறை செயலாளர் பழனியப்பன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர்மோகன கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்தக் குழுவினர் செவ்வாய்க்கிழமை பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்தித்தனர். கர்நாடக தரப்பில்தரம்சிங்குடன், அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது முதல்வர் ஜெயலலிதாவின் கடிதத்தை தமிழக குழு தரம்சிங்கிடம் கொடுத்தது. அக்கடிதத்தில் நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். வாராந்திர, மாதாந்திர அடிப்படையில் தண்ணீர்திறந்து விட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை பராமரிப்பதற்கும் முயற்சிகள்மேற்கொள்ளப்படும் என தரம்சிங் தமிழக குழுவிடம் உறுதி அளித்தார்.
மேலும், காவிரியில் தற்போது தண்ணீர் வரத்து சிறப்பாக உள்ளதால்,தமிழகத்திற்குரிய நீரை திறந்து விடுவதில் சிரமம் இருக்காதுஎன்றும் தரம்சிங் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications