தலைமை செயலக முற்றுகை போராட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
சென்னை:
தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், நீதிமன்ற ஆட்சி மொழியாகவும் அறிவிக்கக் கோரி தமிழ்பாதுகாப்பு இயக்கம் சார்பில் செப்டம்பர் 17ம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் எனதமிழ் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
இந்த இயக்கத்தின் முன்னணித் தலைவர்களான டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், டாக்டர் சேதுராமன் ஆகியோர் ஆலோசனைநடத்தினர். அதன் பின்னர் ராமதாஸ், திருமாவளவன், சேதுராமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது திருமாவளவன் கூறுகையில், தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், நீதிமன்றங்களில்அலுவல் மொழியாகவும் அறிவிக்கக் கோரி தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் செப்டம்பர் மாதம் 17ம் தேதி சென்னையில்மிகப் பெரும் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு நடத்தும் இந்தப் போராட்டத்தில் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களும்,ஏராளமான தமிழறிஞர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதே நாளன்று, ஏற்கனவே திட்டமிட்டபடி, வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள்முன்பும் இயக்கத்தினர் காலை முதல் மாலை வரை போராட்டம் நடத்துவர் என்றார் திருமாவளவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications