தமிழக ஆளுநராக மூத்த காங். தலைவர் நியமனம்?
சென்னை:
தமிழக ஆளுநர் பதவியிலிருந்து எஸ்.எஸ்.பர்னாலா ஓய்வு பெற்ற பிறகு, மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரை அப் பதவியில்நியமிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநராக இரண்டாவது முறையாக பதவி வகித்து வரும் பர்னாலா வரும் நவம்பர் மாதம் 2ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். இப்பதவியில் தொடர்ந்து நீடிக்க அவருக்கு விருப்பம் இல்லை. பஞ்சாப் திரும்பி தீவிர அரசியலில் ஈடுபட அவர்முடிவு செய்துள்ளார்.இதையடுத்து புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டுதொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு புதிய ஆளுநரைத் தேர்வு செய்ய மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் என்.டி.திவாரி, எம்.எல். பொதேதார் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் இந்தப்பதவிக்கு அடிபடுகிறது. என்.டி. திவாரி தற்போது உத்தராஞ்சல் மாநில முதல்வராக இருக்கிறார்.
தனது வயதைக் காரணம் காட்டி முதல்வர் பதவியில் இருந்து விலக அவர் கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக இருந்தால், அது தேர்தலில் திமுக கூட்டணிக்குச் சாதகமாக இருக்கும் என்றுகாங்கிரஸ் தலைமை நம்புகிறது. மேலும் ஜெயலலிதாவுக்கு ஈடு கொடுக்க ஆளுநர் பதவியில் அரசியல் செய்யும் ஒரு நபர்இருப்பது நல்லது என்றும் காங்கிரஸ் கட்சி கருதுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications