இந்திய கடன்: கலாமுக்கு பணம் அனுப்பிய வாலிபர்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இந்தியாவின் கடனைத் தீர்ப்பதற்காக தன் பங்குக்கு ரூ. 3000க்கான காசோலையைஅனுப்பினார். இந்த காசோலையை தமிழக அரசுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பி வைத்தது.
இதையடுத்து மாநில அரசு அதிகாரிகள், அந்த இளைஞரை வரவழைத்து காசோலையை அவரிடமே திருப்பிக் கொடுத்தனர்.சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் (பெயர் குறிப்பிடப்படவில்லை) இந்தியாவின் கடன் தொகையை அறிந்துமலைத்துப் போனார். ஒவ்வொரு இந்தியரும் தலா ரூ. 3,000 செலுத்தினால் இந்தியாவின் கடன் தொகையை மொத்தமாகஅடைத்து விடலாம் என்பதை அறிந்த அவர் உடனடியாக ரூ. 3,000க்கு வங்கியில் காசோலையை (டிமாண்ட் டிராப்ட்) எடுத்தார்.
இந்த காசோலையை குடியரசுத் தலைவர் அப்துல் கலாக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் ஒரு கடிதத்தையும் இணைத்தார்.அதில், இந்தியாவின் கடன் சுமைக்கு எனது பங்கை அனுப்பி வைத்துள்ளேன். இதை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுமாறும்கோரியிருந்தார்.
இந்தக் காசோலை கிடைக்கப் பெற்ற குடியரசுத் தலைவர் மாளிகை உடனடியாக அதை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது.காசோலையை சம்பந்தப்பட்ட நபரிடம் திருப்பிக் கொடுத்து விடுமாறு குடியரசுத் தலைவர் மாளிகை கேட்டுக்கொண்டது.
இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இளைஞரை வரவழைத்து அவரிடம் காசோலையை திருப்பிக்கொடுத்தனர்.
காசோலை திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது என்பதற்கான ஒரு அறிக்கையையும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தமிழகஅரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவின் கடனைத் தீர்க்க ரூ. 3,000 அனுப்பிய இளைஞரின் மாத சம்பளம் ரூ. 8,000 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், இந்தியாவின் கடனைத் தீர்க்க வேண்டும் என்ற ஆவலால் தனது சக்தியையும் மீறி பணத்தை அனுப்பிவைத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications