தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் புதன்கிழமை அதிகாலையில் தயாளு அம்மாள் கீழே விழுந்து விட்டார். இதையடுத்துஉடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட தயாளு அம்மாளுக்குஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை எடுத்துப் பார்க்கப்பட்டது.
அதில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை, அவரது உடல் நிலையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று டாக்டர்கள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications