ஷேம் ஷேம்,பப்ளிக் ஷேம்! ராதாரவி புலம்பல்!!
சென்னை:
![]() |
மக்கள் குறைகளை கேட்பதற்காக இ-மெயில் முகவரியை தொகுதி முழுக்க எழுதி வைத்தேன். ஆனால் குறைகளைக் கூறுவதைவிட்டு விட்டு, என்ன படத்தில் நடிக்கிறீர்கள், ரஜினியின் அடுத்த படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டுத்தான் முக்கால்வாசிப் பேர்மெயில் அனுப்புகின்றனர். இதை நினைத்தாலே அவமானமாக இருக்கிறது என்று நடிகரும், சைதாப்பேட்டை அதிமுகஎம்.எல்.ஏவுமான ராதாரவி வெறுத்துப் போய் கூறினார்.
திமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட சைதாப்பேட்டையில் யாருமே எதிர்பாராத அளவுக்கு அதிமுக சார்பாலி அட்டகாசமாகவெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றார் ராதாரவி.
வெற்றி பெற்ற பிறகு தொகுதி மக்களை சந்திக்காமல் எஸ்கேப் ஆகும் எம்.எல்.ஏக்களுக்கு மத்தியில் அடிக்கடி தொகுதிப் பக்கம்விசிட் அடித்து குறைகளைக் கேட்பது, தொகுதியில் பல்வேறு கட்டடங்களைத் திறந்து வைப்பது, அப்படியே படங்களிலும்நடிப்பது, அதிமுக பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு அனல் பறக்கப் பேசுவது என படு பிசியாக இருந்து வருகிறார்ராதாரவி.
தொகுதியில் உள்ள படித்த வாக்காளர்கள் பலர் தங்களது குறைகளை நேரில் வந்து கூற முன் வருவதில்லை என்பதை உணர்ந்தஅவர், படித்த மக்களின் வசதிக்காக தனது இ-மெயில் முகவரியை தொகுதி முழுக்க எழுதி வைத்தார். இதன் மூலம் மாடர்ன்எம்.எல்.ஏவாகவும் மாறினார்.
தொகுதி குறித்த அனைத்து விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துக் கொண்டு, குறைகளை பட்டியலிட்டுவைத்து படிப்படியாக அவற்றை நிவர்த்தி செய்து வருகிறார். இ-மெயில் மூலம் ஏகப்பட்ட புகார்கள் குவியும் என்றுஎதிர்பார்த்துக் காத்திருந்தவருக்கு பெரும் அதிர்ச்சிதான் காத்திருந்தது.
குறைகளுக்குப் பதில் சினிமா சம்பந்தமாகவே மெயில்கள் வந்தவண்ணம் இருப்பதால் வெறுத்துப் போய் இருக்கிறார் ராதாரவி.அவர் கூறுகையில்,
தமிழக எம்.எல்.ஏக்களிலேயே, கம்ப்யூட்டர் மூலம் மக்கள் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்வது நான் மட்டுமே. தினமும்இ-மெயில் மூலம் வரும் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி அதை நிவர்த்தி செய்து வருகிறேன்.வாக்காளர்களுக்கும் அதுகுறித்து தெரிவிக்கிறேன். ஆனால் கடந்த 8 மாத காலத்தில் இதுவரை குறைகளைக் கூறி வந்தமெயில்களின் எண்ணிக்கை ரொம்பவும் குறைவு. மாறாக சினிமா சம்பந்தமாகவே கேள்விகள் வருகின்றன.
நீங்கள் எந்தப் படத்தில் நடிக்கிறீர்கள், சந்திரமுகி படத்தில் நடிக்கலையே ஏன், அடுத்த படம் என்ன, உங்கள் பட ஹீரோ யார்என்றரீதியில்தான் கேள்விகள் வருகின்றன. இதனால் நான் வெறுத்துப் போய் விட்டேன்.
மக்கள் குறைகளை எம்.எல்.ஏக்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் எம்.எல்.ஏக்களுக்குமுதல்வர் ஜெயலலிதா கம்ப்யூட்டர் வசதி செய்து கொடுத்தார். ஆனால் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதற்கான சரியானவிழிப்புணர்ச்சி மக்களிடையே இல்லை.
சினிமா சம்பந்தமாகவே மக்கள் என்னிடம் கேள்வி கேட்டு மெயில் அனுப்பி வருவது மிகவும் அவமானமாக இருக்கிறது.படித்தவர்களே இப்படி மெயில் அனுப்புவது எனக்கு வருத்தமாக உள்ளது என்று புலம்பித் தள்ளுகிறார் ராதாரவி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications