மேட்டூர் அணை நிரம்புவது தள்ளிப் போகிறது

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து திடீரென வெகுவாகக் குறைந்து போனதால், அணை நிரம்புவது சற்று தாமதமாகியுள்ளது.

Mettur Dam

கர்நாடகத்தில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்துள்ளது.வினாடிக்கு 60,000 கன அடி நீர் வரை வந்து கொண்டிருந்தது.

நேற்று நள்ளிரவுக்குள் அணை நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பெருமளவில் தண்ணீர் திறந்துவிடப்படும்என்று எச்சரிக்கப்பட்டது.

இதையடுத்து சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் உஷார் நிலையில் இருக்குமாறும்,பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

கரையோரப் பகுதி கிராமங்களில் தண்டேரா போட்டு மக்களை மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை செய்தன.

மேலும் காவிரி டெல்டா பகுதிகளில் காவல்துறை, தீயணைப்புத் துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலையில் திடீரென குறையத் தொடங்கியது. இதனால் நள்ளிரவில் அணைநிரம்பவில்லை.

இன்று அதிகாலை நிலவரப்படி வினாடிக்கு 36,000 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. இதனால் அணை நிரம்புவதுதாமதமாகியுள்ளது. அதே நேரத்தில் இன்று மாலைக்குள் அணை நிரம்பிவிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.

அணையில் தற்போது நீர் மட்டம் 119.73 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும்.

அணையிலிருந்து வினாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளது. கடைசியாக கடந்த 2000ம் ஆண்டுடிசம்பர் 2ம் தேதி தான் மேட்டூர் அணை நிரம்பியது. அதன் பிறகு ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும்நிரம்புகிறது.

மேட்டூர் அணை நிரம்பி வழிவதைப் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அணைப் பகுதியில் குவிந்து வருகின்றனர். இருப்பினும்பாதுகாப்பு கருதி போலீஸார் அவர்களை அணையின் மேல் செல்ல அனுமதிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+