கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்படும்: பாலு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியாவில் துறைமுகங்கள், நீர் வழிப் போக்குவரத்து, கப்பல் கட்டுதல் ஆகியவற்றை மேம்படுத்த ரூ. 1 லட்சம் கோடியில்மாபெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர்டி.ஆர்.பாலு கூறினார்.

இதற்காக தேசிய கடல் போக்குவரத்துக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஓராண்டு கால சாதனைகள் என்ற புத்தகத்தையும், சுனாமி குறித்து மத்தியசெய்தி-ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புத்தகத்தையும் பாலு வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

அடுத்த 10 ஆண்டுகளில் துறைமுகங்களை மேம்படுத்தவும், நாட்டில் கப்பல் போக்குவரத்தை அதிகரிக்கவும், உள்நாட்டு நீர்வழிகளை சீர் செய்து கப்பல் போக்குவரத்தை அதிகரிக்கவும் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 1 லட்சம் கோடியில் மாபெரும் திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் விரைவில் மத்தியஅமைச்சரவையிடம் ஒப்படைக்கப்படும். இதற்குத் தேவைப்படும் நிதியை மத்திய அரசும், தனியார் துறையும் முதலீடு செய்யும்.

இதில் புதிய துறைமுகங்களை கட்டவும், துறைமுகங்களை தரம் உயர்த்தவும் ரூ. 60,000 கோடி ஒதுக்கப்படும். மேலும் 40,000கோடி கப்பல் போக்குவரத்து சார்ந்த பிற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும்.

இதில் கப்பல்கள் வரும் வழிகளை ஆழப்படுத்துவது, புதிய கப்பல் நிறுத்துமிடங்கள் கட்டுவது, துறைமுகங்களுக்கு புதிய கன ரகஎந்திரங்கள் வாங்குவது, துறைமுகங்களுக்குள் ரயில் பாதைகள், சாலைகள் அமைப்பது, துறைமுகங்களை மையமாக வைத்துவர்த்தக மையங்களை உருவாக்குவது ஆகியவையும் அடங்கும் என்றார் பாலு

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் கடலை ஆழப்படுத்தும் பணிகள் பல கட்டமாக நடந்து வருகிறது. இதில் 3 கட்டப் பணிகளைமேற்கொள்ள இந்தியாவைச் சேர்ந்த 5 நிறுவனங்களும், அமெரிக்கா, கொகியா, நெதர்லாந்து, பெர்ஜியம் ஆகிய நாடுகாளச்சேர்ந்த 4 நிறுவனங்களும் டெண்டர்களை சமர்பித்துள்ளன.

பாக் நீரினைப் பகுதியில் 40.68 கி.மீ தூரத்துக்கும், ஆடம்ஸ் பாலம் பகுதியில் 35 கி.மீ. தூரத்திலும் நடக்கவுள்ள இந்த 3 கட்டகடல் ஆழப்படுத்தும் பணிகளுக்கு ரூ. 2,427 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் கொடுத்துள்ள 9 நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். இத்திட்டத்தின் முதல் இரண்டு கட்டப் பணிகளை மத்திய அரசுக்குச் சொந்தமான கடல் ஆழப்படுத்தும் கழகம் மேற்கொண்டுள்ளது.

பாக் நீரினைப் பகுதியில் இந்தக் கழகம் 13.57 கி.மீ. தூரத்திற்கு கடலை ஆழப்படுத்தி வருகிறது.

சேது சமுத்திரப் பணி முடிவடைந்துவிட்டால் மன்னார் வளைகுடாவுக்கும் வங்கக் கடலுக்கும் இடையே பெரிய கப்பல்கள்போக்குவரத்தை நடத்த முடியும். இதனால் கப்பல்களுக்கு 30 மணி நேர பயணமும் எரிபொருளும் மிச்சமாகும்.

மேலும் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைகளுக்கு இடையிலும் கப்பல்கள் இயங்க முடியும். இலங்கையை சுற்றவேண்டிய அவசியம் இருக்காது என்றார் பாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+