கூட்டணி விஷயத்தில் திறந்த மனதுடன் இருக்கிறோம்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கூட்டணி விஷயத்தில் அதிமுக திறந்த மனதுடன் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று கோட்டையில் நிருபர்களை சந்தித்தார் ஜெயலிலதா. அவர் கூறுகையில்,

தமிழக சட்டமன்றத்தை முன் கூட்டியே கலைக்கப் போவதில்லை. முன் கூட்டியே தேர்தலை சந்திக்கும் திட்டம் ஏதும் எங்களிடம்இல்லை.

நாங்கள் தேர்தலை மனதில் வைத்து எந்தத் திட்டத்தையும் நான் அறிவிக்கவில்லை. மக்களுக்குத் தேவையான வளர்ச்சித்திட்டங்களை அறிவிப்பது ஒரு அரசின் கடமை. அதைத் தான் செய்கிறோம். அதை எப்படி தேர்தலோடு முடிச்சு போட முடியும்.

கூட்டணி விஷயத்தில் நாங்கள் திறந்த மனதோடு இருக்கிறோம். கூட்டணி குறித்து பேச நிறைய கால அவகாசம் உள்ளது என்றார்ஜெயலலிதா.

கூட்டணி குறித்து எந்தக் கட்சியாவது உங்களை அணுகியதா என்று கேட்டபோது, சிறிய கட்சி எங்களை அணுகி இருந்தாலும்கூட அதை எப்படி நான் இப்போதே வெளியில் சொல்ல முடியும் என்றார் ஜெயலலிதா.

போலீஸைக் கொண்டு திமுக கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க நீங்கள் முயல்வதாக கருணாநிதி குற்றம் சாட்டியிருக்கிறாரேஎன்று கேட்டதற்கு, போலீஸை வைத்து அதை எப்படிச் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை போலீசைபயன்படுத்துவதில் அவர் கில்லாடியாக இருக்கலாம் என்றார்.

தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் நக்ஸலைட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து எல்லைப்பகுதிகளில் தமிழக போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். நக்ஸல்கள் தமிழகத்துக்குள் நுழைந்துவிடாமல் தடுக்கஅனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

இடையிடையே மத்திய அரசைப் பாராட்டவும் ஜெயலலிதா தவறவில்லை.

வேலை உத்தரவாத சட்டத்தை அமலாக்கியதற்காக மத்திய அரசைப் பாராட்டிய அவர், தேசிய வளர்ச்சிக் கவுன்சிலில் நான்சொன்ன சில கருத்துக்களையம் உள்ளடக்கி இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது மிகுந்த மிகழ்ச்சியளிக்கிறது என்றார்.

மேலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டு வருவதில் மத்திய அரசைத் தாக்கி பாஜக கருத்துதெரிவித்துள்ளது குறித்து கேட்டபோது, பாஜகவுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவிக்க ஜெயலலிதா மறுத்துவிட்டார்.

சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றார்.

மேலும், சுயநிதிக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யசட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் இந்தப் பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளதையும்கருத்தில் கொண்டு புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

சுய நிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரிதமிழக அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்படும் என்றார் ஜெயலலிதா.

இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியாவிட்டால் சுய நிதிக் கல்லூரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று கூறியிருக்கிறீர்களே. அதுசாத்தியமா என்று நிருபர்கள் கேட்டபோது,

வேறு வழியே இல்லாவிட்டால் அதைத் தான் செய்ய வேண்டும். இந்தக் கல்லூரிகளை அரசு ஏற்று நடத்த முடியும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+