ஐடியலின் கூட்டாளிகளிடம் திண்டுக்கல்லில் தீவிர விசாரணை
திண்டுக்கல்:
மோசடி மன்னன் ஐடியல் சுப்பிரமணியத்தின் பணம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அவரது கூட்டாளிகள்இருவரிடமும் திண்டுக்கல்லில் வைத்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மோசடி மன்னன் ஐடியல் சுப்ரமணியனை சமீபத்தில் விராலிபட்டி, வத்தலகுண்டு, கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்குஅழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது ஐடியலுக்கு எதிராக பல ஆதாரங்களையும்போலீஸார் சேகரித்தனர்.இந் நிலையில் கைதாகியுள்ள ஐடியலின் கூட்டாளிகளான செளந்தர் மற்றும் மணிகண்டன் ஆகியோரை நேற்று முன்தினம்போலீஸார் தங்களது காவலில் எடுத்தனர். பின்னர் அவர்களை விராலிப்பட்டி, வத்தலகுண்டு ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இன்று காலை திண்டுக்கல்லுக்கு இருவரையும் அழைத்து வந்த போலீஸார், அங்குள்ள பத்திரப் பதிவு அலுவலகம், வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், ஒரு கம்ப்யூட்டர் மையம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
ஐடியலின் பண விவகாரம் குறித்து இந்த இருவருக்கும் முழுமையாகத் தெரியும் என போலீஸ் தரப்பு நம்புகிறது.
ஐடியலின் பணம் எங்கே முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறியவே இவர்களிடம் போலீஸார் தீவிரவிசாரணை நடத்திவருகின்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications