மலேசியா: தமிழ் தொழிலதிபரை ஏமாற்றிய 2 இந்தியர்களுக்கு பிரம்படி, சிறை
கோலாலம்பூர்:
மலேசியாவில் தமிழ்த் தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றிய இரு இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு பிரம்படி தண்டனைவழங்கவும், 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜீவகுமார். இவர் தனது புதிய தொழிற்சாலைக்கு இந்தியாவில் இருந்து தொழிலாளர்களைஅழைத்து வரத் திட்டமிட்டார்.இதற்காக 38 இந்தியத் தொழிலாளர்களுக்கு வேலைக்கான பெர்மிட் மற்றும் விசா வாங்கும் முயற்சிகளில் இறங்கினார்.
இதைத் தெரிந்து கொண்ட ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர்களான கோடபடி வினோத், சைதன்ய தம்மலபடிஆகியோர் தொழிலாளர்களுக்கு வொர்க் பெர்மிட் வாங்கித் தர தாங்கள் உதவுவதாகத் தெரிவித்தனர்.
இருவரும் மலேசியாவில் பணியாற்றி வருபவர்கள் என்பதால், அவர்களை நம்பினார் ஜீவகுமார்.
ஆனால், இந்த இருவரும் போலியான பெர்மிட்களைத் தயாரித்து அதை ஜீவகுமாரிடம் காட்டி ரூ. 5 லட்சம் பணம் வாங்கினர்.மேலும் சில வங்கிகளின் பெயரில் போலி ஆவணங்களையும் தயாரித்து ஜீவகுமாரிடம் தந்தனர்.
ஜீவகுமாருக்கு அவை போலியானவை என்று தாமதமாகத் தான் தெரிய வந்தது. இதையடுத்து இருவர் மீதும் போலீசில் புகார்தந்தார்.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி, இந்த இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரம்படிகளும் தர உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications