அதிமுக கம்பத்தில் விஜயகாந்த் கொடி!
சென்னை:
அதிமுக கொடிக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்த அக் கட்சியின் கொடியை அகற்றிவிட்டு விஜயகாந்த் ரசிகர்கள்தங்களது மன்றக் கொடியை பறக்க விட்டதால் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. அதிமுக தோன்றிய காலத்திலிருந்தே தீவிரமானஅதிமுக தொண்டர். தனது பகுதியில் சொந்தச் செலவில் கொடிக் கம்பத்தை நிறுவி அதில் அதிமுக கொடியைப்பறக்க விட்டிருந்தார்.மேலும் கடந்த 1994ம் ஆண்டில் இப்பகுதியில் எம்.ஜி.ஆர். சிலையையும் சொந்தமாக நிறுவினார். அப்போதையஅமைச்சர்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி, மதுசூதனன் ஆகியோர் சிலையை திறந்து வைத்தனர்.
கடந்த 1996ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்குஅதிமுக சீட் தரவில்லை. இதனால் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து அவர்நீக்கப்பட்டார்.
இதையடுத்து அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்த பாபு, சமீபத்தில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராகசேர்ந்தார். இதைத் தொடர்ந்து தான் சொந்தமாக நிறுவிய கொடிக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த அதிமுககொடியை அகற்றிவிட்டு, விஜயகாந்த் மன்றக் கொடியை ஏற்றினார்.
மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்களுடன் கூடிய சுவர் விளம்பரத்தை அழித்து விட்டுவிஜயகாந்த் படத்தை வரைந்தார்.
இதுகுறித்து அதிமுக வட்டச் செயலாளர் தேவன் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.காவல் நிலையம் முன் ஏராளமான அதிமுகவினர் கூடினர்.
போட்டிக்கு விஜயகாந்த் ரசிகர்களும் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக தரப்பினர் கூறுகையில், சிலை மற்றும் கொடிக் கம்பம் வைத்து விட்டால் அது கட்சிக்கு சொந்தமாகி விடும்.தனி நபர் யாரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது. எனவே விஜயகாந்த் கொடியை பறக்க விட்டது தவறுஎன்றனர்.
இதையடுத்து இனிமேல் கொடிக் கம்பத்திற்கு உரிமை கொண்டாட மாட்டேன் என்று பாபுவிடம் போலீஸார் எழுதிவாங்கிக் கொண்டு அவரை அனுப்பி விட்டனர். பாபுவை மிரட்டி போலீசார் எழுதி வாங்கியதாகக் தெரிகிறது.
வெளியில் வந்த பாபு கூறுகையில், எனது சொந்த செலவில் ரூ. 50,000 வரை செலவு செய்து சிலையையும்,கொடிக் கம்பத்தையும் வைத்தேன்.
1972ம் ஆண்டு முதலே அதிமுகவுக்காக பாடுபட்டு வந்தேன்.
என்னை கட்சி புறக்கணித்து விட்டதால்தான் விஜயகாந்த் மன்றத்தில் சேர்ந்தேன். கொடிக் கம்பம் எனக்குசொந்தமானது. போலீஸார் கட்டாயப்படுத்தி என்னிடம் எழுதி வாங்கி விட்டனர். இதனை நான் ஏற்க மாட்டேன்என்றார்.
இந் நிலையில் விஜயகாந்த் கொடி பறக்க விடப்பட்டிருந்த கொடிக் கம்பத்தையே போலீஸார் அங்கிருந்துஅகற்றிவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications