சிக்க(லி)ல் சிதம்பரம்: ராஜினாமா கோரி எதிர்க் கட்சிகள் அமளி- நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வருமான வரித்துறை வழக்குகளில் தனது மனைவி நளினியை ஆஜராக வைத்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலகவேண்டும் என பாஜக தலைமையிலான எதிர்க் கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் அமளியில்ஈடுபட்டன.

இன்று லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் அதிமுகவும் மீண்டும் இந்த விவகாரத்தைக்கிளப்பின.

சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என லோக்சபாவில் எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு காங்கிரஸ்எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து குரல் எழுப்பினர்.

அப்போது சிதம்பரத்துக்கு ஆதரவாகப் பேசிய ராஷ்ட்டீய ஜனதா தளத்தின் உறுப்பினர் தேவேந்திர பிரசாத் யாதவ், முன்னாள்பிரதமர் வாஜ்பாயின் உறவினர்கள் குறித்துப் பேசினார்.

இதையடுத்து பாஜகவினரின் முழுக் கோபமும் யாதவ் பக்கம் திரும்பியது. அவரை நோக்கி பாஜகவினர் கத்த, பதிலுக்குலாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தினர் குரல் கொடுத்தனர். இந் நிலையில் பாஜக உறுப்பினர்கள் அவையின் மையத்தில் கூடிநின்று நிதியமைச்சரே பதவி விலகு என கோஷமிட ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து யாதவ் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.இதன் பின்னரே பாஜகவினர் அமைதியாயினர்.

அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, மத்திய அமைச்சரின் மனைவி அவர் துறை சார்ந்தவழக்கை நடத்தியது சரியில்லை தான். ஆனால், இதை அரசியலாக்கும் பாஜகவின் செயல் அதைவிடத் தவறானது என்றார்.

அப்போது பேசிய சிதம்பரம், எனக்குத் தெரிந்து என் மனைவி இந்த வழக்கை எடுத்து நடத்தியிருப்பார் என்று இந்த அவையில்இருக்கும் யாரும் உண்மையிலேயே நம்புவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. இது என் பார்வைக்கு வந்திருந்தால் அதைஆரம்பத்திலேயே தடுத்திருப்பேன் என்றார்.

ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து பாஜகவினர் தொடர்ந்து கூச்சல் போட்டனர். பதிலுக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம்,காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டதால் அவையில் பெரும் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பாஜகதலைமையில் எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

அதே போல ராஜ்யசபாவிலும் இந்த விவகாரம் இன்றும் வெடித்தது. அதிமுக எம்பிக்கள் சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர். இதற்கு பாஜக எம்பிக்கள் ஆதரவகாகக் குரல் தந்தனர். காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்த்து கோஷமிட்டனர்.

இதையடுத்து அதிமுக எம்பிக்களும் பாஜக எம்பிக்களும் அவையின் மையப் பகுதியில் கூடி நின்று சிதம்பரத்துக்கு எதிராககோஷமிட்டனர். இதனால் அமளி துமளி நிலவியதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நளினிக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். டெல்லி பெண் வழக்கறிஞர்கள்சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரம் என்று பேசப்பட்டு வரும் இந்தக் காலத்தில் மத்திய அமைச்சரின் மனைவியானவழக்கறிஞர் ஒரு வழக்கை எடுத்து நடத்தியதை பெரிதாக்குவது நியாயமற்றது.

ஆணாதிக்கம் நிறைந்த இந்திய நீதித்துறையில் மிக அரிதான மூத்த பெண் வழக்கறிஞர்களில் ஒருவர் நளினி. சென்னையில்தனிப்பட்ட முறையில் அவர் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

வரிகள் விஷயத்தில் மிகுந்த நுணுக்கம் தெரிந்த வழக்கறிஞர் அவர். இந்த விஷயத்தைப் பெரிதாக்குவதன் மூலம்பெண்களுக்கான அதிகாரம் உரிய முறையில் போய்ச் சேருவதைத் தடுக்க முயற்சி நடப்பதாகவே தெரிகிறது.

சிதம்பரம் ஒரு அரசியல் தலைவர் என்பதற்காக அவரது மனைவி தனது பணியை தனிப்பட்ட முறையில் செய்ய எந்தத் தடையும்இருக்க முடியாது. கணவரின் அனுமதியை வாங்கிவிட்டுத் தான் அவர் வழக்குகளை எடுத்து நடத்த வேண்டும் என்று யாரும்எதிர்பார்க்க முடியாது.

அவராகப் போய் வருமான வரி வழக்குகளை எடுத்து நடத்தவில்லை. சில வழக்கறிஞர்கள் ஆஜாராக முடியாத நிலையில்இவரிடம் அந்த வழக்குகள் வந்துள்ளன. அதைத் தான் அவர் எடுத்து நடத்தியுள்ளார். இது தொடர்பாக விரிவானவிளக்கத்தையும் அவர் தந்துவிட்டார்.

அதன் பிறகும் இதை ஒரு பிரச்சனையாக்க முயல்வது ஆச்சரியம் அளிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், சிதம்பரத்தின் சிக்கல்கள் அவ்வளவு சீக்கிரத்தில் தீராது என்றே தெரிகிறது.

வருமான வரித்துறை வழக்கை நளினி சிதம்பரம் எடுத்து நடத்தியற்கான காரணம் குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் தரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கோரியுள்ளது.

மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்க மார்க்சிஸ்ட் ஆதரவு மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் அண்ணன் லட்சுமணன் செட்டியாருக்குசொந்தமான கற்பகாம்பாள் மில் என்ற பஞ்சாலை உள்ளது.

சமீபத்தில் இந்த ஆலையின் முதன்மையான பங்குதாரராக கார்த்திக் சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நியமிக்கப்பட்ட பிறகு இந்த ஆலைக்கு பெருமளவில் வரிச் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும்,புதிய இயந்திரங்கள் வாங்குவதில் பல்வேறு வரி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+