தாவூதா?, அவர் இங்க இல்லையே.. என்கிறது பாகிஸ்தான்
டெல்லி:
தாவூத் இப்ராகிம் தவிர நேபாளத்தில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட காரணமாக இருந்த மெளலானாமசூத் அஸார், உல்பா தலைவர் பரேஷ் பரூவா ஆகியோரையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானிடம்இந்தியா கோரியுள்ளது.
ஆனால், தாவூத் இப்ராகிம் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.இந்திய-பாகிஸ்தான் உள்துறைச் செயலாளர்கள் மட்டத்திலான இரண்டு நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கியது.
அப்போது இரு தரப்பினரும் தங்களால் தேடப்படும் குற்றவாளிகனின் பட்டியலை பரிமாறிக் கொண்டனர்.
இந்தியா கொடுத்த பட்டியலில் மும்பை குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான தாவூத் இப்ராகிம், காத்மாண்டுவில் இருந்துஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தையும் பயணிகளையும் மீட்க காஷ்மீர் சிறையில் இருந்துவிடுவிக்கப்பட்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தலைவர் மெளலானா மசூத் அஸார்,விமானத்தைக் கடத்திய 5 தீவிரவாதிகள், உல்பா தலைவரான பரேஷ் பருவா, தாவூதின் கூட்டாளியான சோட்டா ஷகீல்,
ஹிஸ்புல் முஜாகிதான் தலைவர் சையத் சலாவுதீன், காலிஸ்தான் கமாண்டே படைத் தலைவர் பரம்ஜித் சிங், பப்பர் கல்சா சர்வதேசதலைவர்களான வாத்வா சிங், லக்பீர் சிங், ரஞ்சித் சிங், உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீலின் உயிரைக் குறி வைத்துள்ளஇஷாக் அட்டா உசேன், சகீர் சபீர் அலி சேக் உள்பட 30 தீவிரவாதிகளின் பெயர்கள் உள்ளன.
இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தின் பாதுகாப்புடன் அந் நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
அதே போல பாகிஸ்தான் தரப்பில் இருந்து 37 பேர் அடங்கிய பட்டியல் இந்தியாவிடம் தரப்பட்டுள்ளது. அதில் அடங்கியுள்ளநபர்களின் பெயர் விவரம் தெரியவில்லை. ஆனால், பெரும்பாலானவர்கள் போதை மருந்துக் கடத்தல் கும்பலைச்சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் பேசிய அந் நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், தாவூத்இப்ராகிம் பாகிஸ்தானில் இல்லை, அவர் வேறு எங்கோ இருக்கிறார் என்று நினைக்கிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications