இலங்கை: சுடர் ஒளி அலுவலகம் மீது குண்டு வீச்சு- ஒருவர் பலி, 3 பேர் காயம்
கொழும்பு:
இலங்கையில் சுடர் ஒளி தமிழ் நாளிதழின் அலுவலகத்தில் கிரனைட் குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒருவர் பலியானார்.மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று மாலை இச் சம்பவம் நடந்தது. கொழும்பு கிராண்ட்பாசில் உள்ள மடம்பிதியா சாலையில் சுடர் ஒளி நாளிதழின் அச்சகம்உள்ளது. இதன் மீது ஒரு கும்பல் இரண்டு கிரனைட் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடியது.இந்த குண்டுகள் வெடித்துச் சிதறியதில் அலுவலகத்தின் காவலாளியான டேவிட் செல்வரத்னம் (50) படுகாயமடைந்தார்.உடனடியாக மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த குண்டு வீச்சில் மாணிக்கம் கமலநாதன் என்ற புரூப் ரீடரும், கம்ப்யூட்டர் ஆபரேட்டரான சுப்பிரமணியம் சுதாஸ் மற்றும்தீபம் தொலைக்காட்சியின் ஊழியரான அனஸ் ஆகியோரும் காயமடைந்தனர்.
அதே நேரத்தில் அலுவலகத்தில் இருந்த செய்தி ஆசிரியர்கள், நிருபர்கள் காயமின்றி தப்பிவிட்டனர். இந்த குண்டுவெடிப்பில்சுடர் ஒளி அலுவலக கட்டடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஒரு வேன், காரும் சேதமடைந்தன.
குண்டுகளை வீசியவர்கள் ஒரு வெள்ளை நிற வேனில் வந்ததாகவும், மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் முரண்பட்டதகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு வாரங்களுக்கு முன் வெல்லவத்தையில் உள்ள சுடர் ஒளி துணை அலுவலகம் மீது ஒரு நபர் இரண்டு கிரனைட் குண்டுகளைவீசியது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவை வெடிக்காமல் போனதால் சேதம் ஏற்படவில்லை.
சமீபத்தில் இந்தப் பத்திரிக்கையின் புகைப்படக் கலைஞரான யதுர்சன் பிரேமச்சந்திரனை ஜனதா விமுக்தி பெரமுனா சிங்களகட்சியைச் சேர்ந்த கும்பல் கடுமையாகத் தாக்கியதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications